அந்த தெ.ஆ லெஜெண்ட் தான் என் ரோல் மாடல்.. காயம் இல்லனா போன வருஷமே வந்துருப்பேன்.. மயங் பேட்டி

Mayank Yadav 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பஞ்சாப்பை தோற்கடித்து தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 70, ஜானி பேர்ஸ்டோ 42 ரன்கள் எடுத்து 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அதன் காரணமாக பஞ்சாப் வெல்வதற்கான வாய்ப்புகள் 90% பிரகாசமாக இருந்தது. ஆனால் அப்போது அறிமுகப் போட்டியில் பந்தை கையில் எடுத்த 21 வயது வீரர் மயங் யாதவ் தன்னுடைய இரண்டாவது ஓவரிலேயே ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். அதன் வாயிலாக ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

- Advertisement -

ரோல் மாடல்:
அதே வேகத்தில் அடுத்த ஓவரில் ஜானி பேர்ஸ்டோவை அவுட்டாக்கிய அவர் 4 ஓவரில் 27 ரன்களை 6.8 என்ற எக்கனாமியில் மட்டும் கொடுத்து துல்லியமாக பந்து வீசினார். அந்த வகையில் பஞ்சாப்பின் வெற்றியை பறித்து ஆட்டநாயகன் விருதையும் வென்ற அவர் தற்போது ஏராளமான ரசிகர்களும் சில முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தான் தம்முடைய ரோல் மாடல் என்று மயங் யாதவ் கூறியுள்ளார். மேலும் காயத்தை சந்தித்திருக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடியிருப்பேன் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நான் ஒரு வேகப்பந்து வீச்சாளரை மட்டுமே பார்க்கிறேன். அவர் டேல் ஸ்டைன். அவர் என்னுடைய ரோல் மாடல்”

- Advertisement -

“இதற்கு முன் நான் எப்போதும் 156 வேகத்தில் வீசியதில்லை. இன்று 155 தொட்டேன். அது என்னுடைய வேகமான பந்து. ராக்கெட், விமானம் அல்லது பைக் போன்ற எதுவாக இருந்தாலும் வேகம் எனக்கு த்ரல்லை கொடுக்கும். எப்போதும் அணிக்காக தொடர்ச்சியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி குறைந்த ரன்களை மட்டும் கொடுத்து உதவ வேண்டும் என்பதே என்னுடைய இலக்காகும். வேகம் என்னுடைய கூடுதல் பலமாகும். நான் அதை விடாமுயற்சியுடன் பயன்படுத்த முயற்சிக்கிறேன்”

இதையும் படிங்க: எங்க ஒளிஞ்சுருந்தீங்க.. 21 வயதிலேயே அட்டகாசம் செய்த மயங் யாதவ் பற்றி.. டேல் ஸ்டைன் பாராட்டு

“விஜய் ஹசாரே கோப்பைக்குப்பின் விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இது போன்ற காயங்கள் வேகப்பந்து வீச்சாளரின் வாழ்க்கையில் நண்பனை போல் ஒரு பகுதியாகும். கடந்த ஒன்றரை வருடங்களில் எனக்கு 2 – 3 காயங்கள் ஏற்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரை நான் காயத்தாலேயே தவற விட்டேன்” என்று கூறினார். முன்னதாக 155.80 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய நீங்கள் இத்தனை நாளாக எங்கே ஒளிந்திருந்தீர்கள் என்று அவரை டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement