எங்க ஒளிஞ்சுருந்தீங்க.. 21 வயதிலேயே அட்டகாசம் செய்த மயங் யாதவ் பற்றி.. டேல் ஸ்டைன் பாராட்டு

Dale Styen
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது லீக் போட்டியில் பஞ்சாப்பை 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய மயங் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். தற்போது அவரைப் பற்றி தான் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வியப்புடன் பாராட்டி பேசி வருகின்றனர்.

ஏனெனில் அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ குயிண்டன் டீ காக் 54, நிக்கோலஸ் பூரான் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் அடுத்த உதவியுடன் 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு கேப்டன் ஷிகர் தவான் 70, ஜானி பேர்ஸ்டோ 42 ரன்கள் எடுத்து 102 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்தனர்.

- Advertisement -

ஸ்டைன் வியப்பு:
அதனால் பஞ்சாப் கண்டிப்பாக வெல்லும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அப்போது பந்து வீசிய மயங் யாதவ் தன்னுடைய 2வது ஓவரிலேயே ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கி.மீ வேகத்தில் ஒரு பந்தை வீசினார். அதன் வாயிலாக ஐபிஎல் 2024 தொடரில் அதிவேகமான பந்தை வீசிய பவுலர் என்ற சாதனையை படைத்த அவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதே வேகத்தில் அசத்தலாக பந்து வீசிய அவர் அடுத்த சில பந்துகளில் தவானை அவுட்டாக்கி அதற்கடுத்த ஓவரில் ஜானி பேர்ஸ்டோவை காலி செய்தார். அந்த வகையில் 2 தரமான அனுபவமிக்க பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கிய மயங் யாதவ் அதிரடியான வேகத்துடன் நல்ல லைன், லென்த் ஆகியவற்றையும் பின்பற்றி 4 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 6.8 என்ற துல்லியமான எக்கனாமியில் பந்து வீசினார்.

- Advertisement -

இத்தனைக்கும் வெறும் 21 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவருக்கு இது தான் அறிமுக போட்டியாகும். அந்த போட்டியிலேயே இந்தளவுக்கு அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருது வென்றதாலேயே அவரைப் பற்றி தற்போது அனைவரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் மயங் யாதவ் பற்றி தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வேகபந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் ட்விட்டரில் பாராட்டியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: யூஸ் பண்ணுங்கன்னு ஸ்டீவ் ஸ்மித்துக்கு மெசேஜ் பண்ணிட்டேன்.. மயங் யாதவ் பற்றி ஸ்டுவர்ட் ப்ராட் பாராடு

“மணிக்கு 155.8 கி.மீ வேகம். மயங் யாதவ், நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள்” என்று கூறியுள்ளார். அதாவது இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தீர்கள் என்று ஸ்டைன் வியப்புடன் பதிவிட்டுள்ளார். இது போக பிரட் லீ, ஸ்டுவர்ட் ப்ராட் போன்ற முன்னாள் ஜாம்பவான் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களும் மயங் யாதவை பாராட்டி வருகின்றனர். மொத்தத்தில் இதே போல செயல்பட்டு அவர் வருங்காலங்களில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.

Advertisement