யோ_யோ டெஸ்டில் கோலி ,மனிஷ் பாண்டேவை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர்..! – யார் தெரியுமா…?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ‘யோ யோ’ ஒரு கட்டாய சோதனையாக மாறிவிட்டது. இந்த தேர்வில் 16.1 புள்ளிகள் எடுக்கும் வீரர்கள் மட்டுமே இந்திய கிரிக்கெட் அணியில் சேர்க்கப்படுகின்றனர். இந்நிலையில் இளம் வீரர் மயங்க் டகர் மற்ற இந்திய வீரர்களை விட அதிக புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார்.
dagar
இந்திய யு19 அணியின் முன்னாள் வீரரான மயங்க் டகர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வந்தார். பஞ்சாப் அணியில் 20 லட்சம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட இவருக்கு ஒரு போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இதுவரை 11 முதல் ரக போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 30 விக்கெட்டுகக்ளை கைப்பற்றியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிக பெரிய தலைவலியாக இருந்து வரும் இந்த யோ யோ டெஸ்டில் அனுபவமிக்க வீரரான கோலி கூட 19 புள்ளிகளை எடுத்திருந்தார். அதே போல இந்திய அணியின் பேட்ஸ்மேன் மனிஷ் பாண்டி 19.2 புள்ளிகள் எடுத்திருந்ததே ‘யோ யோ’ டெஸ்டில் இந்திய அணி வீரர் எடுத்த அதிகப்படியான புள்ளிகளாக இருந்து வந்தது.
mayank
இந்நிலையில் சமீபத்தில் “யோ யோ ” டெஸ்டில் பங்குபெற்ற இளம் வீரர் மயங்க் டகர் 19.3 புள்ளிகள் எடுத்து அசத்தியுள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்களில் “யோ யோ” டெஸ்டில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மயங்க் டகர். அனுபவமிக்க வீரர்கள் இந்த டெஸ்டில் நிர்னையித்த குறைந்தபட்ச புள்ளிகளை எடுக்க திணறி வந்த நிலையில் மயங்க் டகர் எடுத்த இந்த புள்ளிகள் மற்ற கிரிக்கெட் வீரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.