தவானுக்கு பதிலாக புதிய துவக்க வீரர் களமிறங்குகிறார் – இந்திய அணி இன்று அறிவிப்பு

Dhawan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு இன்று நடக்கிறது. உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோற்றதால் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

dhawan 1

- Advertisement -

 

அந்த மாற்றங்களை இன்று நடக்கும் தேர்வுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று மும்பையில் நடக்கும் தேர்வு குழு கூட்டத்தில் எம் எஸ் கே தலைமையிலான குழு தேர்வு செய்கிறது. இந்த தொடரில் தோனி இடம் பெறவில்லை என்று கூறியதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.

Dhawan

ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஒருநாள் தொடரில் ரோஹித் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் டெஸ்ட் தொடரில் கோலி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது. தவான் காயத்திலிருந்து குணமாகாததால் அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement