தெ.ஆ டெஸ்ட் தொடர் முடிந்ததும் டியூட்டிக்கு கிளம்பிய மாயங்க் அகர்வால் – விவரம் இதோ

Agarwal-2
- Advertisement -

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தற்போது இந்திய அணி வென்றுள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

agarwal

- Advertisement -

இந்த தொடர் வரும் நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கப்படும் என்று ஏற்கனவே அட்டவணை வெளியாகி இருந்தாலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே இந்த தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் டெஸ்ட் துவக்க வீரரான மாயங்க் அகர்வால் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரது பெயர் இடம்பெறவில்லை. அதனால் தற்போது விஜய் ஹஸ்ரே கோப்பை தொடரில் இன்று கர்நாடக அணிக்காக விளையாட இருக்கிறார்.

agarwal 3

விஜய் ஹசாரே கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. அதற்காக கர்நாடக அணி சார்பாக இன்று நடக்கவுள்ள போட்டியில் அகர்வால் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில் இன்று அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஆடுவது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement