தவானும் இல்ல, கெய்க்வாட்டும் இல்ல. அப்போ யாருதான் முதல் போட்டியில் ஓப்பனர் – அட இவர்தானா?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு அகமதாபாத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ind

- Advertisement -

இந்நிலையில் அகமதாபாத் பயோ பபுளில் இருந்த இந்திய வீரர் நால்வர் மற்றும் நிர்வாகிகள் மூவர் என ஏழு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்த தொடரில் முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரரான ராகுல் தனது சகோதரியின் திருமணம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

அதேபோன்று துவக்க வீரர்களாக இடம்பெற்ற ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் முதல் ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுடன் களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Agarwal

இந்நிலையில் வீரர்கள் கொரோனா பாதிப்பினால் சிக்கியதன் காரணமாக தற்போது கூடுதல் துவக்க வீரராக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இம்முறை அகமதாபாத் பயோ பபுள் வளையத்தில் கொரோனா பரவியது இப்படித்தானாம் – விவரம் இதோ

இதன்காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் மாயங்க் அகர்வால் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அதேபோன்று நீண்ட நாட்களாகவே மிடில் ஆர்டரில் தனது இடத்திற்காக காத்திருக்கும் சூரியகுமார் யாதவ் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

Advertisement