மொத்தமாக 86 துவக்க வீரராக 33 தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்ட மாயங்க் அகர்வால் – விவரம் இதோ

ind
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தேனீர் இடைவேளையின்போது நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்திருந்தது.

agarwal

- Advertisement -

ரோகித் 115 ரன்களுடனும் அகர்வால் 84 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வந்தனர்.

இந்தப் போட்டியில் அகர்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் இந்தியா சார்பாக சதம் விளாசிய 86 ஆவது வீரர் மற்றும் துவக்க வீரராக களமிறங்கி சதம் விளாசிய 33வது வீரர் என்ற சாதனையை அகர்வால் படைத்தது குறிப்பிடத்தக்கது.

agarwal 1

இந்த போட்டியில் தற்போது இரண்டாவது நாள் உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட்டை இழந்து 324 ரன்களுடன் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா 176 ரன்கள் எடுத்த நிலையில் மகாராஜ் பந்துவீச்சின் மூலம் ஆட்டம் இருந்து வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement