5 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி அகர்வால் செய்த சாதனை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Agarwal-2

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் இந்திய அணி 1- 0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் டெஸ்ட் சாம்பியன் தொடர் துவங்கி இன்னும் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

agarwal 1

இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரரான அகர்வால் சிறப்பாக விளையாடி தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை விளாசினார். வெறும் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள அகர்வால் இதுவரை 497 ரன்கள் குவித்துள்ளார்.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள புதிய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் அகர்வால் புதிய சாதனை ஒன்றைப் படைத்தார். அது யாதெனில் தற்போது இரட்டை சதம் அடித்ததன் மூலம் அகர்வால் இருபத்தி ஐந்தாவது (25 ஆவது இடம்) இடத்தை பேட்டிங் தரவரிசையில் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Agarwal-2

இதன்மூலம் குறைந்த போட்டிகளில் விளையாடி விரைவாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25 ஆவது இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை அகர்வால் படைத்தது குறிப்பிடத்தக்கது.