அடித்தது 34 ரன் தான். ஆனால் அதில் 30 வருட சாதனையை தகர்த்த இந்திய வீரர் – விவரம் இதோ

Agarwal
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் வெலிங்டனில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடுகளம் பச்சைப் பசேலென்று காட்சி அளித்ததால் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் எந்தவித யோசனையும் இன்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Kohli

- Advertisement -

அதன்படி இந்திய அணி புதிய பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. ப்ரித்வி ஷா 16 ரன்களிலும், புஜாரா 11 ரன்களிலும், விராட் கோலி 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேலும் விஹாரியும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணியின் ரன் குவிப்பு முற்றிலும் முடங்கியது.

ஆனால் இதில் ஒரே ஒரு நல்ல அறிகுறியாக மயங்க் அகர்வால் மட்டும் சற்று தாக்கு பிடித்து பொறுமையாக விளையாடினார். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 29 ரன்களை எடுத்திருந்தார். கடைசியில் மயங்க் அகர்வால் 34 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Agarwal-2

இதன்மூலம் மயங்க் அகர்வால் ஒரு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி 30 வருடத்திற்கு பிறகு நியூசிலாந்து மண்ணில் முதல் செஷன் முழுவதும் தாக்கு பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 1990ல் மனோஜ் பிரபாகர் முதல் செஷன் முழுவதும் விளையாடி இருந்தார். அதன் பின்னர் 30 ஆண்டுகள் கழித்து தற்போது மாயங்க் அகர்வால் முதல் செஷன் முழுவதும் தாக்குப்பிடித்து ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement