தொடர்ந்து இரண்டு சதம்..! இங்கிலாந்து அணியை பழிவாங்கிய இளம் இந்திய வீரர்..! – காரணம் இதுதான்..?

agarwal

இந்திய ஏ அணி -இங்கிலாந்து லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி டெர்பி மைதானத்தில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
agarwal
அந்த போட்டிக்கு பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் மோதியது, இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இந்திய ஏ அணி மீண்டும் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்தது.இந்த போட்டியில் இந்திய ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களை குவித்தது. இதில் அபிராமாக விளையாடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங்க அகர்வால் 104 பந்துகளில் 112 ரன்களை குவித்தார்.ஏற்கனவே மேற்கிந்திய ஏ அணியுடன் நடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால்.
manayak
6 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இந்திய அணி 2 போட்டிகளிலும், இங்கிலாந்து லயன்ஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இன்னும் 2 லீக் போட்டிகள் மீதமுள்ள நிலையில் மேற்கிந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும், இறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணி பலப்பரீட்சை செய்யும்.