இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் அணியில் இணைக்கப்பட்ட துவக்க வீரர் – யார் தெரியுமா?

ind
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளன. பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் இந்த முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு அகமதாபாத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

ind

- Advertisement -

இந்நிலையில் அகமதாபாத் பயோ பபுளில் இருந்த இந்திய வீரர் நால்வர் மற்றும் நிர்வாகிகள் மூவர் என ஏழு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இந்த தொடரில் முதலாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரரான ராகுல் தனது சகோதரியின் திருமணம் காரணமாக கலந்து கொள்ளவில்லை.

அதேபோன்று துவக்க வீரர்களாக இடம்பெற்ற ஷிகர் தவான் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால் முதல் ஒருநாள் போட்டியின்போது ரோகித் சர்மாவுடன் களமிறங்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

agarwal

இந்நிலையில் வீரர்கள் கொரோனா பாதிப்பினால் சிக்கியதன் காரணமாக தற்போது கூடுதல் துவக்க வீரராக மாயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதை பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : முதல் ஒருநாள் போட்டியிலிருந்து கே.எல் ராகுல் விலக இதுதான் காரணமாம் – வெளியான தகவல்

இதன் காரணமாக தற்போது மாயங்க் அகர்வால் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணியின் முதன்மை துவக்க வீரராக அணியில் இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடி வரும் அகர்வாலுக்கு மீண்டும் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement