- Advertisement -
ஐ.பி.எல்

நான் இவ்வளவு பெரிய தொகைக்கு (14.25கோடி) ஏலம் போனதில் ஆச்சரியமில்லை – மேக்ஸ்வெல் பேட்டி

இந்தாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில மேக்ஸ்வெலை 14.25 கோடிக்கு ஆர்சிபி அணி ஏலம் எடுத்தது. மேக்ஸ்வெலை ஏலத்தில் வாங்க சென்னை அணியும் பெங்களூரு அணியும் போட்டி போட்டுக் கொண்டன. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சரியாக விளையாடாத போதிலும் 14.25 கோடிக்கு ஏலம் போனது குறித்து மேக்ஸ்வெல்லிடம் கேள்வி கேட்கப் பட்டன. அதற்கு பதிலளித்துள் மேக்ஸ்வல், அதிக விலைக்கு ஏலம் போனது குறித்து நான் எந்தவித ஆச்சர்யமும் படவில்லை. நான் அதிக விலைக்கு போவேன் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று பதிலளித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் அடித்தார். கடந்த சீசனில் அவரது அவரேஜ் வெறும் 15.42 தான் மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 101.88 தான். இதன் காரணமாகவே பஞ்சாப் அணி அவரை கடந்த ஆண்டு தங்களது அணியிலிருந்து வெளியேற்றியது. மேலும் அதன்பிறகு அவர் ஐ.பி.எல் ஏலத்தில் தன் பெயரை பதிவிட்டு தற்போது மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார்.

- Advertisement -

இருந்தபோதிலும் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில், சென்னை அணியும் பெங்களூர் அணியும் அவரை வாங்க கடும் போட்டி போட்டுக் கொண்டன. இறுதியாக மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். வருடா வருடம் மோசமான ஆட்டதை அவர் வெளிப்படுத்தினாலும் அவருக்கான மவுசு குறையவில்லை, ஏலதொகையும் குறையவில்லை இதுகுறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மேக்ஸ்வெல் : ஒவ்வொரு அணிகளும் ஆஃப் ஸ்பின் போடத் தெரிந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை எதிர்பார்த்து இருந்தனர். நான் இவ்வளவு தொகைக்கு ஏலம் போவேன் என்பது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். இதில் எனக்கு எந்த விதமான ஆச்சிரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட உள்ள மேக்ஸ்வல், இன்று நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நிச்சயம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -
Published by