ரோஹித் இல்லாத குறையை இவர் போக்குவார். அட்டகாசமாக விளையாடும் திறமை இவரிடம் இருக்கு – மேக்ஸ்வெல் புகழாரம்

Maxwell
- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு பயிற்சிகளை செய்து வருகிறது. மேலும் இந்த தொடருக்கான மூன்று விதமான அணி வீரர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தொடருக்காக ஆயத்தமாகி வருகின்றனர்.

INDvsAUS

- Advertisement -

இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இந்திய அணிக்கு எதிரான தொடர் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ரோகித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மென் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக துவக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். ஆகவே அவர் அணியில் இல்லாமல் இருப்பது சற்று நேர்மறையான விஷயமாகத்தான் இருக்கும். இருப்பினும் இந்திய அணி பல பேக்கப் பேட்ஸ்மேன்களை வைத்துள்ளது. ஏராளமானோர் துவக்க வீரராக விளையாட தயாராக இருக்கிறார்கள்.

Rahul

என்னை பொறுத்தவரை கேஎல் ராகுல் ஐபிஎல் தொடரில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தொடக்க வீரராக களம் இறங்கினாலும் சரி, மிடில் ஆர்டரில் இறங்கினாலும் சரி சிறப்பாக விளையாடுவார் என்பதை உறுதியாகக் கூறுவேன். மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் சிறந்த வீரர்கள் என்பதை நான் பார்த்துள்ளேன். பஞ்சாப் அணியின் ஓய்வு அறையில் அவர்களுடன் நேரத்தை செலவழித்து மகிழ்ச்சி.

Rohith

கேஎல் ராகுல் எல்லாத் திசைகளிலும் பந்துகளை விரட்டுகிறார். அவரிடம் பலவீனம் என்பது குறைவாகவே உள்ளது என்றும் மேக்ஸ்வெல் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம்பெறாத ரோஹித் டெஸ்ட் தொடரில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும் காயத்தில் இருந்து ரோஹித் விரைவில் இந்திய அணிக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement