மனஅழுத்த பிரச்சனையில் இருந்து மீண்ட மேக்ஸ்வெல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

Maxwell

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரரான மேக்ஸ்வெல் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது தனக்கு மனநிலை அழுத்தம் இருப்பதாகவும் அதன் காரணமாக நான் கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்க போகிறேன் என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

glenn-maxwell

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியும் அவரது மனநிலையை புரிந்துகொண்டு கிரிக்கெட்டில் இருந்து அவருக்கு தற்காலிக ஓய்வு கொடுத்தது மட்டுமின்றி அவருக்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கப்போவதாக அறிவித்து. அதனை தொடர்ந்து சிறிது நாட்கள் ஓய்வில் இருந்த மேக்ஸ்வெல் தற்போது சற்று மனநிலை மாறி மீண்டும் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு முன்னேறி உள்ளார்.

அதன்படி மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு தற்போது திரும்பியுள்ள கிளன் மேக்ஸ்வெல் தற்போது விக்டோரியா பிரிமியர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். அதன்படி டான்காஸ்கர் அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதே சமயம் பவுலிங்கில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு உதவியாக அமைந்தார்.

Maxwell

இதன் மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ள மேக்ஸ்வெல் தனது ஆட்டத்தை ஆரம்பித்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் வரும் ஐ.பி.எல் தொடரிலும் அவர் பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -