கே.எல் ராகுலை சீக்கிரம் அவுட் ஆக்கணுனா இப்படி பண்ணா தான் முடியும் – ஐடியா கொடுத்த மேக்ஸ்வெல்

Maxwell
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

rahul 3

இந்த தொடரின் மூன்று விதமான இந்திய அணியிலும் இளம் வீரர் கே.எல் ராகுல் விளையாட உள்ளார். மேலும் நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் 670 ரன்கள் குவித்த ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டாக தனது உச்சகட்ட பார்மில் உள்ளார். எனவே இந்தத் தொடரில் ராகுலின் ஆட்டம் பிரமாதமாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன்காரணமாக அவரது விக்கெட்டை எவ்வாறு வீழ்த்துவது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் அந்த ஆலோசனையின் போது ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லும் உடன் இருந்துள்ளார்.

maxwell 1

மேலும் மேலும் ஐபிஎல் தொடரில் ஒன்றாக விளையாடியதால் ராகுலை வீழ்த்துவதற்கான வழியை மேக்ஸ்வெல் இடம் அணி நிர்வாகம் கேட்டுள்ளது. ராகுல் விக்கெட்டை வீழ்த்துவது குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் :

ராகுல் மிகச்சிறந்த வீரர், போட்டியின் இக்கட்டான சூழ்நிலையிலும் போட்டியை சாதாரணமாக கையாளுவார். அதை நான் பக்கத்தில் இருந்து பார்த்து உள்ளேன். எனவே அவரை வீழ்த்துவதற்கான வழிகளை நான் சொன்னேன். அவரை சீக்கிரம் வீழ்த்த வேண்டுமென்றால் ரன் அவுட் செய்துவிடலாம் என கூறியிருந்தேன். மேலும் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கு இதுவே சரியான வழி என்றும் கூறியுள்ளார் மேக்ஸ்வெல்.

Advertisement