நான் செய்தது தப்பு தான் ஆனால் – ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்தது பற்றி மேத்தியூ வேட் பேசியது என்ன

Jos Buttler Mark wood
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக துவங்கியுள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் வெல்வதற்காக 16 அணிகள் போட்டி போடுகின்றன. இந்த உலகக் கோப்பையில் சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க தயாராகும் வகையில் கடந்த வாரம் இங்கிலாந்தை 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொண்ட ஆஸ்திரேலியா 2 – 0 என்ற கணக்கில் போராடி தோற்றது. அதை விட அந்த தொடரில் 2வது கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ வேட் இங்கிலாந்து பவுலர் மார்க் வுட்’டை ஃபீல்டிங் செய்ய விடாமல் தடுத்தது உலக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏனெனில் அப்போட்டியில் கடைசி நேரத்தில் வெற்றிக்கு போராடிய மேத்தியூ வேட் மார்க் வுட் வீசிய ஒரு பந்தை அதிரடியாக அடிக்க முயற்சித்த போதிலும் அது கேட்ச்சாக மாறியது. அப்போது சிங்கிள் எடுக்க முயற்சித்த மேத்யூ வேட் அதே சமயத்தில் கேட்ச் பிடிப்பதற்காக வந்த மார்க் வுட்’டை வேண்டுமென்றே கையை விட்டு தடுத்து நிறுத்தும் வகையில் டைவ் அடித்து வெள்ளைக்கோட்டை தொட்டு தனது விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டார்.

- Advertisement -

அதனால் மார்க் வுட் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் அந்த இடத்தில் இங்கிலாந்து அவுட் கேட்டிருந்தால் நிச்சயம் கிடைத்திருக்கும். ஆனால் இங்கிலாந்து அதற்காக எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில் நீண்ட நாட்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதால் அந்நாட்டு ரசிகர்களின் அதிருப்தியை வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் சுமூகமாக இந்த பயணத்தை முடிக்க விரும்பியதாலேயே புகார் செய்யவில்லை என கேப்டன் ஜோஸ் பட்லர் கூலாக தெரிவித்தார்.

இருப்பினும் தீப்தி சர்மா மன்கட் செய்ததற்காக நேர்மைக்கு புறம்பாக நடந்து கொண்டதாக விமர்சித்த அதே இங்கிலாந்தினர் தங்களுக்கு நேர்மைக்குப் புறம்பான நிகழ்வு நடந்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று இந்திய ரசிகர்கள் விமர்சித்தனர். மறுபுறம் ஏமாற்றுவதை காலம் காலமாக வைத்துள்ள ஆஸ்திரேலியா மீண்டும் தங்களை ஒரு சீட்டிங் அணி என்பதை நிரூபித்துள்ளதாகவும் ரசிகர்கள் சாடினர். இந்நிலையில் அந்த பரபரப்பான தருணத்தில் நடந்தேறிய அந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த போது தான் தாம் செய்தது தவறு என்பதை புரிந்து கொண்டதாக மேத்யூ வேட் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் அந்த சமயத்தில் அதற்காக இங்கிலாந்து அணியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் நான் மைதானத்தை விட்டு வெளியேறியிருப்பேன் என்று கூறும் அவர் இங்கிலாந்தினர் புகார் அளிக்காததால் தொடர்ந்து விளையாடியதாக தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த தருணம் மிகவும் வேகமாக நடந்து விட்டது. இருப்பினும் அந்தப் போட்டியில் பெவிலியன் திரும்பிய போது “நீங்கள் அவரை வேண்டுமென்றே தள்ளி விட்டீர்கள்” என்று சக வீரர் கேன் ரிச்சர்ட்சன் என்னிடம் கூறினார். அப்போது அவ்வாறு நான் செய்யவில்லை என்று எனக்குத் தோன்றினாலும் டிவி திரையில் பார்த்த போது “ஆம், நான் அவ்வாறு தான் செய்தேன்” என்பதை உணர்ந்தேன்”

“ரசிகர்களின் கூச்சலுக்கு மத்தியில் அப்போட்டியில் 150 கி.மீ வேகத்தில் மார்க் வுட் வீசிய பந்தை முதலில் நான் அடித்தேனா என்பதே எனக்கு தெரியவில்லை. அதே சமயம் நான் ரன் அவுட் ஆவேனா என்பதையும் அறியவில்லை. அப்போது சிங்கிள் எடுக்க முயற்சித்த போது டேவிட் வார்னர் என்னை திருப்பி அனுப்பினார். அதனால் வெள்ளைக் கோட்டை தொட முயற்சித்து டைவ் அடித்த பின்பு தான் பந்து மேலிருந்து கிழே வருவதை நான் பார்த்தேன். எனவே ஆம் அந்த இடத்தில் நான் சரியாக நடந்து கொள்ளவில்லை”

“அதை செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு இருந்தால் அதை நான் செய்ததற்காக வருந்துவேன். ஆனால் அப்போது எனது தலையில் 150 கி.மீ வேகப்பந்து லேசாக பட்டதால் என்னை சுற்றி அனைத்து விஷயங்களும் வேகமாக நடந்து விட்டன. தற்போது அந்த நிகழ்வை திரும்பிப் பார்க்கும் போது தான் என்ன நடந்தது என்பதை புரிந்து கொண்டேன். அந்த இடத்தில் என் மீது தவறு இருந்தது தான். ஒருவேளை அதற்காக இங்கிலாந்து புகாரளித்து அதை நான் பெரிய திரையில் பார்த்திருந்தால் நிச்சயம் மைதானத்தை விட்டு வெளியேறியிருப்பேன். அந்த சமயத்தில் அவ்வளவு தான் என்னால் செய்திருக்க முடியும்” என்று கூறினார்.

Advertisement