ஆஸ்திரேலியா மாதிரி பெரிய பிட்ச்களில் விளையாட நிச்சயம் இந்திய அணிக்கு அவர் தேவை – மேத்யூ ஹைடன் கருத்து

Hayden
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அண்மையில் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 15 பேர் கொண்ட முதன்மை வீரர்கள் பட்டியலும், நான்கு வீரர்களைக் கொண்ட ரிசர்வ் பட்டியலும் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. இப்படி இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானதிலிருந்தே இரண்டு கேள்விகள் மட்டுமே அணித்தேர்வு குறித்து சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Avesh-Khan

- Advertisement -

அந்த வகையில் ஒன்று முகமது ஷமி முதன்மை அணியில் இடம் பெறாமல் போனது மற்றொன்று ஆடும் லெவனில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? அல்லது தினேஷ் கார்த்திக் விளையாடுவாரா ? என்ற இரண்டு கேள்விகள் தான் தொடர்ந்து இருந்து வருகிறது. அதோடு ஆசியக் கோப்பையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை ரிஷப் பண்ட் பயன்படுத்திக் கொள்ளாத வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடி வருகிறார்.

இதன் காரணமாக எதிர்வரும் டி20 உலக கோப்பையில் இவர்கள் இருவரில் யார் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள் என்று கேள்வியே அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்வது என்பது குறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் கூறுகையில் :

Rishabh Pant 44

என்னை பொறுத்தவரை டி20 உலக கோப்பை அணியின் பிளேயிங் லெவனில் ரிஷப் பண்ட் தான் இருக்க வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலியா சூழ்நிலையில் விளையாடும் போது உங்களுக்கு ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் பவுலர்களுக்கு எதிராக அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு வீரர் வேண்டும். அந்தவகையில் ரிஷப் பண்ட் தான் சிறந்த வீரர்.

- Advertisement -

பந்துவீச்சாளர் மற்றும் ஆடுகளத்தின் வேகத்தை பயன்படுத்தும் போது தினேஷ் கார்த்திக் ஒரு அற்புதமான வீரர் தான். ஆனாலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் பந்தினை மைதானத்தை விட்டு தொலைதூரத்திற்கு அடிக்கக்கூடிய ஒரு வீரர் வேண்டும். அந்த வகையில் ரிஷப் பண்ட் இருந்தால் தான் அது இந்திய அணிக்கு நல்லது.

இதையும் படிங்க : எனக்கும் கோபம் வரும் ஆனால் – களத்தில் கூலாக இருக்கும் ரகசியம் பற்றி தோனி ஓப்பனாக பேசியது என்ன?

அதேபோன்று ஆஸ்திரேலிய மைதானங்களில் பெரிய ஸ்கோர் வேண்டுமெனில் குறைந்தது மூன்று முதல் நான்கு பவர் ஹிட்டர்களை அணியில் வைத்திருப்பதும் மிக முக்கியமானது அந்த வகையில் ரிஷப் பண்ட் தான் என்னுடைய தேர்வு என ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement