- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இல்ல, 2023 உலக கோப்பையில் அந்த இந்திய வீரரை ஆஸ்திரேலியாவுக்கு கொடுத்துருங்க – ஹெய்டன் ஜாலியான கோரிக்கை

வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக்கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் இறுதிக்கட்டமாக தயாராகி வருகின்றன. அதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்த தொடரில் இந்தியா வெல்வதற்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலியும் பவுலிங் துறையின் கருப்பு குதிரையாக போற்றப்படும் ஜஸ்பிரித் பும்ராவும் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.

ஏனெனில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் அவரைப் போலவே உலகின் அனைத்து இடங்களிலும் அனைத்து விதமான டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு ரன் மெஷினாக 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்துள்ள விராட் கோலி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நாயகனாக ஜொலித்து வருகிறார். அதே போல 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வரும் பும்ரா போட்டியின் எந்த நேரத்திலும் துல்லியமான யார்கர் பந்துகளை வீசி வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஹெய்டன் கோரிக்கை:
இருப்பினும் 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் இல்லாதது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனாலும் தற்போது குணமடைந்துள்ள அவர் கம்பேக் கொடுத்துள்ளது இந்திய அணிக்கு மிகப்பெரிய அமைந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற ஒரு விருது விழா வழங்கும் நிகழ்ச்சியில் “நீங்கள் 2023 உலகக்கோப்பையில் இந்திய அணியிலிருந்து ஒரு சிறந்த வீரர் ஆஸ்திரேலியாவுக்கு விளையாட விரும்பினால் அதை யாராக இருப்பார்” என்று முன்னாள் ஜாம்பவான் வீரர் மேத்தியூ ஹெய்டனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அது விராட் கோலி தான் என அவர் பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் மற்ற அணிகளை காட்டிலும் வரலாற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்பட்டுள்ள விராட் கோலி 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற சரித்திரத்தை படைத்தார். அதே போல மிட்சேல் ஜான்சன் போன்ற ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போன ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அஞ்சாமல் அவர்களை விட ஆக்ரோசமாக செயல்பட்டு பதிலடி கொடுத்த விராட் கோலியை தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என நிறைய முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் இதற்கு முன் பலமுறை கூறியுள்ளனர்.

- Advertisement -

மேலும் அடிலெய்ட் போன்ற ஆஸ்திரேலிய மைதானங்களில் அபாரமாக செயல்பட்டுள்ள அவருக்கு ஆஸ்திரேலியாவில் ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். அப்படி இருந்தும் விராட் கோலியை விட ஜஸ்பிரித் பும்ரா தங்களுடைய நாட்டுக்காக இந்த உலகக் கோப்பையில் விளையாடுவதை விரும்புவதாக மேத்தியூ ஹெய்டன் வித்தியாசமான பதிலை தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலக கோப்பையில் இந்திய அணியிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட விரும்பும் ஒரு வீரர் ஆவார்” என்று கூறினார்.

மேலும் இந்திய அணியில் திலக் வர்மா ஒருநாள் போட்டிகளில் விளையாடாத போதிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறந்த முடிவு என்று பாராட்டும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பைகளுக்கு முன்னதாக நீங்கள் எப்போதுமே சில புதிய வீரர்களை கொண்டு போவீர்கள். அந்த வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள திலக் வர்மாவின் கிளாஸை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். இந்த உலகக் கோப்பை மட்டுமல்ல அவரை அடுத்ததாக நடைபெறும் 2019 டி20 உலகக் கோப்பையிலும் விளையாட வைக்க இது நல்ல உத்தி என்று நினைக்கிறேன்” என கூறினார்.

இதையும் படிங்க:ஒழுங்கா மன்னிப்பு கேளுங்க, வாழ்த்துலனாலும் பரவால்ல இப்டி பண்ணது ரொம்ப வலிக்குது – ஹெத் ஸ்ட்ரீக் வேதனை பேட்டி

இதை தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி இந்தியா தம்முடைய முதல் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -