- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிபோனது இதனால் தான் என நினைக்கிறேன் – மேத்யூ ஹைடன்

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டபோது கேப்டன் ரோகித் சர்மா பதவி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அண்மையில் பதவியேற்ற சுப்மன் கில் தற்போது ஒருநாள் போட்டிகளுக்குமான கேப்டனாக மாறியுள்ளார்.

ரோஹித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டது ஏன்? : மேத்யூ ஹைடன்

அதனை தொடர்ந்து முதல் முறையாக முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இளம் வீரரான சுப்மன் கில்லின் தலைமையின் கீழ் விளையாட இருக்கின்றனர். ஏற்கனவே இவ்விரு வீரர்களும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட இருக்கின்றனர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அடுத்த 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரை இருவரும் விளையாட விருப்பம் தெரிவித்திருந்தாலும் நிர்வாகம் அவர்களை ஓய்வை நோக்கி அழுத்தம் கொடுப்பதாக பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இதன் காரணமாக இந்த ஆஸ்திரேலியா தொடரானது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்குமே மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

அதிலும் குறிப்பாக 38 வயதான ரோஹித் சர்மாவிற்கு இந்த தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பதவி நீக்கத்திற்கான காரணம் என்ன? என்றும் அவரது எதிர்காலம் குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே ரோகித் சர்மா போன்ற ஒரு சிறப்பான கேப்டனை பதவி நீக்கம் செய்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த தொடர்களை வென்று கொடுத்த அவரை இந்திய அணி பதவி நீக்கம் செய்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே : அவருடைய வயது தான் என்று நினைக்கிறேன். 38 வயதான அவரை நீக்கிவிட்டு இளம்வீரரை கேப்டனாக கொண்டு வந்துள்ளார்கள்.

இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் இவர்தான் – மைக்கல் கிளார்க் கணிப்பு

எனவே அடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் இந்திய அணியில் தாக்குப்பிடித்து 2027 உலக கோப்பை வரை விளையாடுவது சற்று கடினம் தான் என்று நினைக்கிறேன். ஆனாலும் ரோகித் மற்றும் விராட் ஆகியோரது அனுபவம் இந்திய அணிக்கு நிச்சயம் தேவை. ஏனெனில் அவர்களிடம் இருக்கும் அனுபவத்தை இளம் வீரர்களுக்கு கடத்தும் பட்சத்தில் இந்திய அணி இன்னும் பலம் பெறும் என்று மேத்யூ ஹைடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -