சேப்பாக்கம் பிட்ச் அவங்களுக்கு தான் செட்டாகும்.. ஐபிஎல் 2024 கோப்பையை வெல்லப்போகும் அணியை கணித்த ஹைடன்

Matthew Hayden 6.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 26ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற உள்ளது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வென்று புதிய ஐபிஎல் சாம்பியனாக சாதனை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இவ்விரு அணிகளில் ஹைதெராபாத் மிகவும் ஆபத்தான அணியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் எதிரணிகளை அடித்து நொறுக்கி வருகிறார்கள். அதனால் 287 ரன்கள் குவித்து, 5 ஓவரில் 100 ரன்கள் விளாசி, 9.2 ஓவரில் 166 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத் சாதனை வெற்றிகளை பெற்றது.

- Advertisement -

ஹைடன் கணிப்பு:
மேலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க பட் கமின்ஸ் கேப்டனாக இருப்பது அந்த அணியின் கூடுதல் பலமாகும். மறுபுறம் கௌதம் கம்பீர் பின்னணியில் வலுவாக இயங்கும் கொல்கத்தா அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஆண்ட்ரே ரசல், நரேன், ரிங்கு சிங் போன்ற தரமான வீரர்களை கொண்டுள்ளது. எனவே மேட்ச் வின்னர்களை கொண்ட கொல்கத்தாவும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானம் செம்மண் பிட்ச் சுனில் நரைன் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கச்சிதமாக பொருந்தும் என்று மேத்தியூ ஹெடன் வைத்துள்ளார். எனவே இப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இங்கே கொல்கத்தா வெல்லும் என்று எனக்கு அதிக தன்னம்பிக்கை இருக்கிறது”

- Advertisement -

“சில நாட்கள் ஓய்வெடுத்து குவாலிபயர் 2 போட்டியில் ஹைதராபாத் ஆட்டத்தை பார்த்த கொல்கத்தா அணியினர் அவர்களுடைய பலம் மற்றும் பலவீனங்களை தெரிந்து கொண்டிருப்பார்கள். அத்துடன் குவாலிபயர் 1 போட்டியில் ஹைதராபாத் அணியை தோற்கடித்த கொல்கத்தா நல்ல வேகத்தைக் கொண்டுள்ளனர். மேலும் தரமான சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இங்குள்ள செம்மண்ணில் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் உணர்கிறேன்”

இதையும் படிங்க: இதனால் தான் உங்க இந்திய கேரியர் இப்படியிருக்கு.. அங்கயும் காலை வாரிடாதீங்க.. சாம்சனை விளாசிய கவாஸ்கர்

“ஃபைனல் என்பது அனைத்தையும் சரியாக எளிமையாக பெறுவதாகும். மிகவும் கடினமான இந்த தொடரில் வலுவான இதயத்தை கொண்டவர்கள் மட்டுமே கடைசியில் கோப்பையை வெல்ல முடியும். அதிர்ஷ்டம் என்பதும் விளையாட்டு வீரர்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றும். ஆனால் அனைத்தையும் விட போட்டி நாளில் நீங்கள் உங்களுடைய அணிக்காக எப்படி ஈடுபாடுடன் விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம்” என்று கூறினார்.

Advertisement