அங்க தான் விராட் கோலிக்கு சவால் காத்திருக்கு.. இதை செய்யலன்னா இந்தியா கஷ்டப்படும்.. ஹைடன் பேட்டி

Matthew Hayden 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு தயாராகி வருகிறது. லீக் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்காவை தோற்கடித்த இந்தியா சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை பார்படாஸ் நகரில் சந்திக்கிறது. முன்னதாக இந்த தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி லீக் சுற்றில் 1, 4, 0 ரன்கள் மட்டுமே ஏமாற்றத்தை கொடுத்தார்.

பொதுவாகவே 3வது இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடக்கூடிய அவர் இந்த உலகக் கோப்பையில் துவக்க வீரராக விளையாடி வருகிறார். இருப்பினும் அந்த இடத்தில் தடுமாற்றமாக செயல்படுவதால் மீண்டும் அவரை 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காணப்படுகின்றது. ஆனால் லீக் சுற்று நடைபெற்ற நியூயார்க் மைதானம் பேட்டிங்க்கு மிகவும் சவாலாக இருந்தது.

- Advertisement -

ஹைடன் அட்வைஸ்:
எனவே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விராட் கோலி மீண்டும் அசத்துவார் என்று தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் சூப்பர் 8 சுற்றிலும் தொடர்ந்து விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாட வேண்டும் என்று மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ரன் குவிப்பது வெற்றிக்கு வித்திடுவதை லீக் சுற்றில் பார்த்ததாக ஹைடன் கூறியுள்ளார்.

எனவே முதல் 6 ஓவர்களில் விராட் கோலி அதிரடியாக விளையாடத் தவறினால் இந்தியா சிரமத்தை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய பெஞ்ச் மார்க் என்ன? 100, 50 அல்லது ஸ்ட்ரைக் ரேட்டா? பார்படாஸ் நகரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் நல்ல பிட்ச்சில் ஆரம்பத்திலேயே போட்டியை முன்னிலையில் எடுத்துச் சென்றனர்”

- Advertisement -

“எனவே அங்கே தான் வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு வரும் போது விராட் கோலிக்கு சவால் விடுக்கப்படும். என்னுடைய பார்வையில் அவர் தொடர்ந்து ஓப்பனிங்கில் விளையாட வேண்டும். அந்த இடத்தில் ஏன் தேர்வுக் குழுவினர் நம்பிக்கை வைத்தார்கள் என்பதை அவர் காண்பிப்பார். அதே சமயம் அவர் தொடர்ந்து சிறப்பான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: 325 ரன்ஸ்.. தெ.ஆ அணியை வெளுத்து வாங்கிய மந்தனா.. இந்திய கிரிக்கெட்டின் இளவரசியாக யாருமே செய்யாத.. 2 சாதனை

“வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் 6 ஓவர்களை பயன்படுத்தி நீங்கள் போட்டியில் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. ஒருவேளை நீங்கள் அங்கே சூழ்நிலையை மட்டும் சமாளித்தால் அது போட்டியின் 2வது பகுதியில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே வெற்றியை நோக்கிச் செல்வதற்கு முதல் 10 ஓவர்கள் நன்றாக அமைவது அவசியம்” என்று கூறினார்.

Advertisement