இந்த காரணத்தால் இப்போ ஆஸி மக்கள் கோலியை விட ரிஷப் பண்ட்டை விரும்புறாங்க.. ஹைடன் பேட்டி

Matthew Hayden 4
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு வெளிநாடுகளிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் ஒரு தெருவுக்கு பெயர் வைக்கும் அளவுக்கு விராட் கோலி மிகவும் பிரபலமானவர். ஏனெனில் பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதற்காக அஞ்சாமல் ஆக்ரோசத்துடன் போராடி எதிரணிகளை டாமினேட் செய்து வெற்றிகளை பெறும் குணத்தைக் கொண்டவர்கள்.

அதே போலவே சாதாரண விக்கெட் விழுந்தால் கூட அதை விராட் கோலி வெறித்தனமாக கொண்டாடக்கூடிய ஆக்ரோஷம் நிறைந்தவர். அத்துடன் அழுத்தமான சூழ்நிலைகளில் நங்கூரமாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் போராடி வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் திறமையைக் கொண்டுள்ளார். அதனாலேயே அவரை பெரும்பாலான ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ரிஷப் பண்ட்:

இந்நிலையில் இப்போதெல்லாம் விராட் கோலியை விட ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய மக்களிடம் பிரபலமாக உள்ளதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக 2020/21 பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னி, காபா மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடியதாக ஹைடன் பாராட்டியுள்ளார். அதனாலேயே அவரை ஆஸ்திரேலிய மக்கள் விரும்புவதாக ஹைடன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் போன்ற பையன்கள் தசை நினைவாற்றலையும் வெற்றி தாகத்தையும் பெற்றுள்ளனர். கடைசியாக அவர் இங்கே விளையாடிய போது ஒரு முக்கிய வீரராக இருந்தார். மேலும் அவர் விளையாடிய விதத்தின் தன்மை காரணமாக ஆஸ்திரேலிய மக்களும் அவரை நேசித்தார்கள். அவருடைய ஆட்டம் உற்சாகமாகவும் புதுமையாகவும் நன்றாகவும் இருந்தது.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடர்:

“அவரைத் தொடர்ந்து விராட் கோலியை போன்ற பழைய நட்சத்திரங்கள் மீண்டும் இங்கே தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவார். எனவே இம்முறை பேட்டிங் பார்வையில் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பார்ப்பது ஆர்வமாக இருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2021 காபா டெஸ்டில் 89* ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்த ரிஷப் பண்ட் இந்தியாவுக்கு வரலாறு காணாத வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க: இம்முறை ஈஸியா இருக்காது.. அவரைத் தாண்டி ஆஸி மண்ணில் இந்தியா ஜெயிப்பது கஷ்டம்.. ஹைடன் கருத்து

அந்த வகையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் மீண்டும் விளையாடத் துவங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்க உள்ள இந்தியாவின் வெற்றிக்கு ரிஷப் பண்ட் கருப்பு குதிரையாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement