பிடிச்ச காபாவில்.. இதை செஞ்சா ஆஸியை வீழ்த்தலாம்.. இந்திய அணிக்கு ஹைடன் கொடுத்த அட்வைஸ்

Matthew Hayden
- Advertisement -

பிரிஸ்பேன் நகரில் இருக்கும் காபா கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்திய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி துவங்க உள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அதனால் 3வது போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய பவுலர்கள் ஸ்டம்ப் லைனில் துல்லியமாக பந்து வீசியது வெற்றியை கொடுத்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசிய இந்திய பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அடி வாங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது போட்டி நடைபெறும் காபா மைதானத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் இருக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஹைடன் ஆலோசனை:

அதனால் அங்கே 4, 5வது ஸ்டம்ப் லைனில் வீசினால் வெற்றிகரமாக செயல்படலாம் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக கடந்த முறை அம்மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 32 வருடங்கள் கழித்து இந்தியா வீழ்த்தியது. எனவே தங்களுக்கு பிடித்த காபா மைதானத்தில் பேட்டிங்கிலும் கொஞ்சம் நன்றாக விளையாடி 350 ரன்கள் குவித்தால் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் ஹைடன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மூன்றாவது போட்டியில் இந்தியா தங்களுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கும் போது 4, 5வது ஸ்டம்ப் லைனை சுற்றிய பகுதிகளில் தொடர்ந்து பந்து வீச வேண்டும். அதை விட அங்கே இந்திய பவுலர்கள் பவுன்ஸை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். அது தான் காபாவில் வேகப்பந்து வீச்சு துறை வெற்றிகரமாக செயல்படுவதற்கான சாவியாகும்”

- Advertisement -

பிடித்த காபா மைதானம்:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் சிவப்பு நிற பந்து இன்னும் அதிக பழக்கப்பட்டதாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது போட்டியில் இளஞ்சிவப்பு பந்தில் சிறப்பாக விளையாடி வெற்றி கண்டது. இந்திய அணி சிவப்பு நிற பந்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். குறிப்பாக பகல் நேரத்தில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: 3வது டெஸ்டில் கிரேட் பும்ராவுக்கு சில பஞ்ச் கொடுப்பேன்.. 2 காரணம் இது தான்.. ஆஸி வீரர் மெக்ஸ்வீனி உறுதி

“அங்கே அவர்கள் 350 ரன்களை சுற்றி எடுக்க வேண்டும். காபா வித்தியாசமான போட்டியாக இருக்கும். அது ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணாக இருந்தாலும் இந்தியாவுக்கும் நன்றாக அமையக்கூடும். ஏனெனில் கடந்த முறை பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அந்த மைதானத்தில் நல்ல நினைவுகளை கொண்டுள்ளார்கள்” என்று கூறினார்

Advertisement