தோனி அளவுக்கு என்னால வேகமா இருக்க முடியாது. உண்மையை ஒப்புக்கொண்ட ஆஸி கேப்டன் – வைரலாகும் ஸ்டம்ப் மைக் பதிவு

Wade-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட ஆரோன் பின்ச் இந்த போட்டியில் விளையாடவில்லை எனவே அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் களமிறங்கி விளையாடினார். இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியதோடு தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி வீரர்களின் ஒட்டுமொத்த சிறப்பான ஆட்டத்தால் ஒருநாள் போட்டியில் இழந்த தொடரை தற்போது டி20 தொடரில் பெற்றுள்ளது.

Wade 3

- Advertisement -

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை எதிர்த்து விளையாடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். அப்படி தவான் பேட்டிங் செய்யும் பொழுது ஒரு சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றும் மைதானத்தில் அரங்கேறியது. அதாவது சுழற்பந்து வீச்சாளர் வீசிய ஒரு பந்தினை அடிக்க முயற்சித்தது அந்த பந்தை தவறவிட்டார். உடனே அந்த பந்தை பிடித்த வேட் ஸ்டம்பிங் செய்ய முயன்றார்.

பின்னர் தவானை நோக்கி அவர் ” நான் தோனி இல்லை. தோனி அளவிற்கு எனக்கு வேகம் இல்லை தானே” என்று சிரித்தபடியே கேட்டார். அவரின் இந்த வாய்ஸ் ஸ்டம்ப் மைக் கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. மேலும் தவானும் இல்லை என்பது போல சிரித்து விட்டு அடுத்த பாலை விளையாட தயாராகிவிட்டார். இந்த நிகழ்வை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும் அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்று. மேலும் விக்கெட் கீப்பிங்கில் தோனியை மிஞ்ச ஆள் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. என்னதான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் டோனி குறித்த செய்திகள் நாளுக்கு நாள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

wade 2

அந்த வகையில் நேற்று தோனியை நினைவுபடுத்தும் வகையில் அவர் பேசி இருந்தது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பதிவினை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தோனியின் ரசிகர்களும் இந்த பதிவிற்கு தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement