எவ்வளவு பந்துகளை வீசினாலும் பொறுமையாக விளையாடி உங்களை இவர் கடுப்பேத்துவார் – மேத்யூ ஹைடன் பேட்டி

Hayden
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில் ஒருநாள் தொடரில் 2-1 என ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் 2-1 என இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வருகிற 17ம் தேதி அடிலெய்டில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

INDvsAUS

2 ஆண்டுக்கு முன் ஆஸ்திரேலியவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பார்டர்-கவாஸ்கர் டிராபியை இந்திய அணி 2-1 என கைப்பற்றி வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்திருந்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி இந்த வருடம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இரு அணி வீரர்களும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் 2 அரைசதம் அடித்து 173 ரன்களும் டி20 போட்டியில் 134 ரன்களை குவித்துள்ளார். இவ்வாறு சிறப்பாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்புவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் இசாந்த் சர்மா இடம்பெறவில்லை. ரோகித் சர்மா கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pujara

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரரான டேவிட் வார்னர் தற்போது காயத்தில் இருப்பதால் மாபெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் விராட் கோலியின் வெற்றிடத்தை போக்கும் அளவிற்கு இந்திய அணியில் ஒருவர் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது அவர் “இந்திய அணியில் கோலி இல்லையென்றாலும் அந்த வெற்றிடத்தை போக்கும் அளவிற்கு பூஜாராவிற்கு திறமை இருக்கிறது.

Cheteshwar Pujara

எனவே, ஆஸ்திரேலியா வீரர்கள் இவரை குறைத்து மதிப்பிட கூடாது என்றும் எவ்வளவு பந்துகளை எதிர்கொண்டாலும் பொறுமையாக விளையாடி ஆஸ்திரேலிய வீரர்களை கடுப்பேத்துவார் என்றும் எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடன்.

Advertisement