அவரை அவசரப்படுத்தாதீங்க. தோனி நல்ல முடிவை எடுப்பார். சுற்றி வளைத்து பேசிய ஹைடன் – தோனி குறித்து அதிரடி கருத்து

Hayden

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆகியிருந்த தோனி தற்போது இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார். தற்போது அவருக்கு 38 வயதாகிறது. உலக கோப்பை தொடருக்குப் பின்னர் தற்போது வரை ஒன்பது மாதங்களாக விருப்ப ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தொடர்களில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்திய அணி அடுத்த விக்கெட் கீப்பருக்கான தேடலையும் தொடர்ந்தது. தற்போது இந்திய நிர்வாகம் தோனியை கடந்து சென்று விட்டது என்றே கூறலாம்.

Dhoni

மேலும் இந்த நிலைமையை மோசமாக்கும் விதமாக பிசிசிஐ அவரது ஒப்பந்தத்தையும் பறித்துவிட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடரும் தற்போது நடக்கவில்லை. இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று பலர் கூறிவருகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாக தோனி ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடினால், அதன் பின்னர் பார்ப்போம் என்று எகத்தாளமாக பேசியிருந்தார் ரவி சாஸ்திரி.

இந்நிலையில் இது குறித்து தோனியுடன் 5 ஆண்டுகாலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடிய மேத்யூ ஹைடன் பேசியுள்ளார். அவர் கூறுகையில் : ஒரு நண்பராக தோனியின் கேரியர் குறித்து நான் பேச முடியாது .அது மிகவும் கடினம். அவர் ஒரு சாம்பியன். அவரை நான் மிகப்பெரிய சாம்பியனாக கருதுகிறேன். விளையாட்டிலிருந்து எப்போது விடுபட வேண்டும் என்று சாம்பியன்களுக்கு தெரியும்.

dhoni 2

ஆனால் நேரம் நெருங்கிவிட்டது என்று அவரை வெளியே தள்ளி விடக்கூடாது. அவர் தனக்கான சிறப்பான முடிவை சீக்கிரம் எடுப்பார் என்று நம்புகிறேன் இவ்வாறு கூறியுள்ளார் மேத்யூ ஹைடன். இந்திய முன்னாள் வீரர்கள் இதுவரை தோனியின் ஓய்வு குறித்து பேசிவந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான இவரும் பேசியுள்ளது தற்போது தோனியின் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

dhoni

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கம்பீர், சேவாக் மற்றும் கவாஸ்கர் தோனி ஓய்வு பெற வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது ஹேடனும் கூறியுள்ளார். இருப்பினும் தோனிக்கு சிலர் ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தோனி இதுவரை தனது ஓய்வு குறித்து எந்த ஒரு தகவலையும்ம் இதுவரை அதிகாபூர்வமாக அறிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.