ஒருநாள் போட்டியில் வெறும் 33 ரன்னில் புதிய சாதனை..! சாதிப்பாரா தல தோனி..!

MSdhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இந்திய அணியின் விக்கெட் கீபருமான தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மற்றும் ஒரு மயில் கல்லை தோனி அடைந்துவிடுவாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறாரகள்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றியது. தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி இன்று (ஜூலை 12) நோட்டிங்ஹம்மில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோனி 33 ரன்களை குவித்தால் சர்வேதச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை குவித்த 4 வது இந்தியர் என்ற பெருமையை பெறுவார் தோனி.

இதுவரை 318 ஒரு நாள் போட்டிகளில் விளையாடயுள்ள தோனி இதுவரை 9967 ரன்களை குவித்துள்ளார். எனவே தோனி 10 ஆயிரம் ரன்களை குவிக்க இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவை. ஏற்கனவே இந்திய அணியில் சச்சின் (18,426), கங்குலி(11,363), டிராவிட்(10,889) ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். தோனி இன்று 33 ரன்களை அடித்தால் 1000 ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார் தோனி.

அதே போல சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 12 வது இடத்தை பிடிப்பார் தோனி. தோனிக்கு அடுத்தபடியாக இந்திய அணியின் விராட் கோலி 208 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 9588 ரன்களை குவித்து 15 வது இடத்தில் இருக்கிறார். தோனிக்கு பின்னர் 10000 ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை கோலி மட்டுமே பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.