ப்ளானிங்னா இப்டி இருக்கணும், நட்சத்திர வீரரை கழற்றி விட்டு – 2023 உ.கோ அணியை இப்போதே கெத்தாக அறிவித்த ஆஸி வாரியம்

Australia
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்க போகும் ஐசிசி 2023 உலகக்கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2011 போல சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா போன்ற டாப் கிரிக்கெட் அணிகள் சவாலை கொடுத்து தங்களது நாட்டுக்கு கோப்பையை வென்று பெருமை சேர்க்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

அந்த வகையில் இன்னும் 2 மாதங்கள் கூட இல்லாத நிலைமையில் ஏற்கனவே இத்தொடரில் அறிவித்த அட்டவணையில் பிசிசிஐ மாற்றம் செய்து கொண்டிருப்பது பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதை விட பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் காயமடைந்துள்ள நிலைமையில் உலகக் கோப்பை வெல்லும் அணியாக கருதப்படும் இந்தியா இன்னும் 60 நாட்கள் கூட இல்லாத சூழ்நிலையில் சோதனை என்ற பெயரில் சொதப்பல்களை அரங்கேற்றி வருவது இந்திய ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணி:
மறுபுறம் அதற்கு நேர்மாறாக பிளானிங் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்வதற்கேற்றார் போல் உலகிலேயே முதல் ஆளாக இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட உத்தேச அணியை இப்போதே ஆஸ்திரேலிய வாரியம் வெளியிட்டு அசத்தியுள்ளது. அதில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ் கோப்பை வென்ற அனுபமிக்க பட் கமின்ஸ் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் நம்பிக்கை நட்சத்திரங்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற டிராவிஸ் ஹெட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதை விட ஆல் ரவுண்டர்களாக மார்கஸ் ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், மிட்சேல் மார்ஷ், கிளன் மேக்ஸ்வெல் ஆகிய 4 தரமான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆஸ்திரேலியாவை மிகவும் வலுவாக காட்சிப்படுத்துகிறது. அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் மகத்தான மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், நாதன் எலிஸ், சீன் அபோட் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

மேலும் சுழல் பந்து வீச்சு துறையில் ஆடம் ஜாம்பா மற்றும் அஸ்டன் அகர் ஆகியோர் தேர்வாகியுள்ள நிலையில் விக்கெட் கீப்பர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அத்துடன் தன்வீர் சங்கா எனும் இதற்கு முன் பெரிய அளவில் விளையாடாத ஸ்பின்னர் நேரடியாக உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைந்துள்ளது.

இருப்பினும் இந்த அணியில் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்ஷேன் இல்லாதது நிறைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 30 போட்டிகளில் 847 ரன்களை 31.37 என்ற சுமாரான சராசரிலேயே எடுத்துள்ள காரணத்தால் கழற்றி விடப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. மேலும் இதே அணியே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் என்று ஆஸ்திரேலிய வாரியம் கூறியுள்ளது.

- Advertisement -

அதில் தற்போது காயத்தை சந்தித்துள்ள பட் கமின்ஸ் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாட மாட்டார் என்று கூறியுள்ள ஆஸ்திரேலிய வாரியம் இந்திய ஒருநாள் தொடரிலும் உலக கோப்பையிலும் கேப்டனாக களமிறங்குவார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இறுதியாக இந்த 18 பேரிலிருந்து 15 பேர் உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தத்தில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் ஆரம்பத்திலேயே முதல் ஆளாக உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளதை பார்க்கும் ரசிகர்கள் இதனாலேயே நீங்கள் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமாக இருக்கிறீர்கள் என்று பாராட்டுகின்றனர்.

இதையும் படிங்க:இப்போவும் சொல்றேன், இந்தியாவின் வருங்கால ஃபாஸ்ட் பவுலர மிஸ் பண்ணிடாதீங்க – இளம் வீரருக்கு வாசிம் அக்ரம் மீண்டும் பாராட்டு

ஆஸ்திரேலியாவின் உத்தேச அணி இதோ: பட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், அஷ்டன் அகர், அலெஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் க்ரீன், ஆரோன் ஹர்டி, ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஷ், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல் , தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் சாம்பா

Advertisement