இவரோட பவுலிங் சூப்பரா இருக்கு. அவர் வெறும் பாஸ்ட் பவுலர் மட்டும் கிடையாது – இந்திய வீரரை புகழ்ந்த ஆஸி வீரர்

Marnus

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டது. அதில் இரண்டு புதுமுக வீரர்களை இந்திய அணி அறிவித்தது. விராட் கோலி மற்றும் முகமது சமிக்கு பதிலாக ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டனர்.

Jadeja

இதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சொதப்பிய பிரித்வி ஷாவிற்கு பதிலாக சுப்மன் கில் இடம் பெற்றார். அதேபோல் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவிற்கு பதிலாக ரிஷப் பண்ட் அணியில் விளையாடினார். சுப்மன் கில் மற்றும் சிராஜ் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்ர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவருமே முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வாய்ப்பினை பெற்றனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களைக் குவித்தது.இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்களை குவித்து 131 ரன்கள் முன்னிலை வகித்தது. ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 200 ரன்களைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்து தங்களது வெற்றியை நிலைநாட்டியது.

Gill

அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார். இவர் முதல் இன்னிங்சில் 15 ஓவர்கள் வீசி 40 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான மார்னஸ் லபுசேன் மற்றும் கிறிஸ் கிரீன் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

siraj 2

முகமது சிராஜின் சிறப்பான பந்துவீச்சு குறித்து ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் மார்னஸ் லபுசேன் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய மார்னஸ் லபுசேன் : “ இந்திய பந்து வீச்சாளர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. அவர்கள் ஆப் சைடில் பந்துகளை வீசி எங்களை ரன்கள் குவிக்க விடாமல் தடுத்து வந்தனர். அவர்கள் புதிய யுக்தியுடன் 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளனர். அவர்களது பந்து வீச்சு எங்களுக்கு மிகவும் அழுத்தமாக இருந்தது. அதுமட்டுமின்றி முகமது சிராஜ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அவர் சீம் பவுலர் கிடையாது, அவர் ஒரு ஸ்விங் பவுலர். முகமது சிராஜிடம் நிறைய திறமைகள் இருக்கிறது” என்று லபுசேன் பாராட்டியுள்ளார்.