இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கும் திட்டத்துடன் நாங்க பலமா திரும்புவோம் – சவால் விட்ட ஆஸி வீரர்

Marnus
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி பகலிரவு போட்டியாக நடந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இந்நிலையில், தற்போது சிறப்பாக நடைபெற்று முடிந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஆஸ்திரேலிய அணியை பழிதீர்த்தது.

Gill

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டை இழந்து முதல் இன்னிங்ஸில் 195 ரன்களை குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களை பெற்று 131 ரன்கள் முன்னிலை வகித்தனர்.

ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 200 ரன்களை பெற்று 10 விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் 70 எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

umesh 1

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென்றால் இந்திய அணியை திணற வைக்கும் திட்டங்களுடன் களம் இறங்குவது அவசியம் என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லபுஸ்சேன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ இந்திய பந்துவீச்சாளர்கள் சிறந்த திட்டத்துடன் களமிறங்க உள்ளனர். அவர்கள் ஸ்டம்பை விட்டு வெளியே பந்துவீச வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி லெக்சைடில் அதிகமான வீரர்களை நிறுத்தி வைப்பார்கள்.

இதன் மூலம் பவுண்டரிகளை தடுத்து ஒரு ரன் மட்டுமே எடுக்க செயவார்கள். இதன் மூலம் ரன்ரேட்டையும் குறைக்க செய்வார்கள். இதன் காரணமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் கவனத்துடன் நிதானமாக விளையாட வேண்டும். அத்தோடு இந்தியர்களின் திட்டத்தை நொறுக்கும் வகையில் நமது திட்டமும் இருக்க வேண்டும்” என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் லபுஸ்சேன் கூறியுள்ளார்.

Advertisement