ரோஹித் சர்மாவிடம் வார்த்தைப்போரில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய வீரர் – இன்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா ?

Marnus

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது போட்டி தற்போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி இரண்டாவது நாள் ஆட்டத்தில் தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாட ஆரம்பித்தது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாலும் துவக்க வீரர் இடத்திற்கு ஒரு குறை இருந்தது. அதனை போக்கும் வகையில் இம்முறை ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட், நேதன் லையன் போன்ற பலமான பந்துவீச்சு கூட்டணிக்கு எதிராக இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

குறிப்பாக 27 ஓவர்கள் வரை களத்தில் நீடித்த இந்த ஜோடி 27வது ஓவரின் போது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்றொரு ஆட்டக்காரரான கில் 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்நிலையில் இன்றைய போட்டியின்போது இந்த இரண்டு துவக்க வீரர்களிடமும் ஆஸ்திரேலிய வீரரான மார்னஸ் லாபுஷேன் வார்தைப்போரில் ஈடுபட்டார்.

Gill

அதிலும் குறிப்பாக 14 நாட்கள் குவாரன்டைன் நாட்கள் முடிந்து வந்த அவரை அந்த “குவாரன்டைன் நாட்களை எப்படி கழித்தீர்கள் ? என்ன செய்தீர்கள் ? என்று கேட்டார். அதற்கு ரோஹித் பதிலளிக்காமல் ஆட்டத்தின் மீது கவனம் செலுத்தினார். மேலும் அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது அவரை அவுட் ஆகிவிடுவீர்கள் என்று கிண்டல் செய்து கொண்டே இருந்தார்.

- Advertisement -

அதேபோன்று மற்றொரு துவக்கவீரரான சுப்மன் கில் இடம் உங்களுடைய பேவரைட் பேட்ஸ்மேன் யார் என்று கேட்டார். அதற்கு கில் ” நான் போட்டி முடிந்ததும் சொல்கிறேன் ” என்று கூறிவிட்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தினார். இப்படி மார்னஸ் செய்த இந்த வார்தைப்போர் இன்றைய போட்டியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.