ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மார்க் வுட்..! மீண்டும் அணிக்கு திரும்புகிறார் வேகப்பந்து வீச்சாளர்..! – காரணம் இதுதான் ?

wood
- Advertisement -

சென்னை மற்றும் ராஜஸ்தான் மோதும் 43 வது ஐ.பி.எல் போட்டி நாளை ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை அணியின் வேக பந்து வீச்சாளர் மார்க் உட் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுளது . அவருக்கும் பதிலாக கடந்த சில போட்டிகளாக காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த தீபக் சஹர் களமிறங்கவுள்ளார்.

- Advertisement -

சென்னை அணியில் ஆடி வரும் இங்கிலாந்து வீரரான மார்க் உட் இந்த 2018 ஐ.பி.எல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அந்த போட்டியிலும் 4 வர்களில் 49 ரன்களை வழங்கி இருந்தார். இதனால் அவரை மற்ற போட்டிகளில் சென்னை அணி களமிறக்கவில்லை.

இந்த மே 24 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்கிறார் மார்க் உட். இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள தற்போது ஐபில் போட்டிகளில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்களான பேன் ஸ்ட்ரோக், கிறிஸ் வோக்ஸ் மோயின் அலி ஆகிய வீரர்களும் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.

deepak

இந்நிலையில் மார்க் உட்டும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட தாய்நாடு திரும்புகிறார் . மார்க் உட் அணியில் இல்லை என்றாலும் மற்றொரு இங்கிலாந்து பிளேயாரான டேவிட் வில்லி அணியில் இருக்கிறார். இதனால் சென்னை அணிக்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இருக்கபோவது இல்லை. மேலும் மார்க் உட்டிற்கு பதிலாக களமிறங்க போகும் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் இந்த ஐ.பி.எல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement