இந்திய அணியின் வீரரான இவரே தற்போதைய கிரிக்கெட் உலகின் சர்வ வல்லமை படைத்த வீரர் – ஆஸி வீரர் புகழாரம்

Mark-Taylor

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. இதற்காக ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருந்த இந்திய அணி வீரர்கள் அனைவரும் சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பின்பு பயிற்சியில் ஈடுபடவும் உள்ளனர்.

INDvsAUS

தற்போது சிட்னி நகருக்கு வெளியில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டுள்ளனர். பின்னர் வைரஸ் பாதிப்பு இல்லாத அனைவரும் சிட்னி நகருக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு முதலில் நவம்பர் 27ஆம் தேதி ஒருநாள் போட்டிகள் துவங்குகின்றன.

இந்திய அணியை இந்த முறையும் விராட் கோலி தலைமை தாங்கி வழி நடத்தப்போகிறார். விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போதெல்லாம் பல சதங்கள் அடித்து அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். இந்த முறையும் அப்படி செய்வார் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மார்க் டெய்லர் விராட் கோலியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

Kohli-1

இதுகுறித்து அவர் கூறுகையில் : அவர்தான் சர்வ வல்லமை படைத்த சர்வதேச வீரர் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்திய அணியில் விராட் கோலி தான் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் அவரிடம் மட்டும் தான் சர்வதேச தரத்திலான பேட்டிங் அடங்கி இருக்கிறது. மூன்று வகையான போட்டிகளுக்கும் சர்வ வல்லமை படைத்த வீரர் அவர் தான். அவரது ஆட்டம் என்னை ஆச்சரியப்படுத்தி கொண்டே இருக்கிறது. என்று தெரிவித்திருக்கிறார் மார்க் டெய்லர்

- Advertisement -

Kohli

விராட் கோலியும் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடிவிட்டு கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார். முதல் டெஸ்ட் பொடியுடன் இந்தியாவிற்குத் திரும்பி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி கர்ப்ப காலத்தில் இருக்கிறார் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் காலத்தில் அவருக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.