தண்ணீரில் நீந்தும் வாத்து மாதிரி.. இதை செய்யும் கில்லை அடக்கலன்னா இங்கிலாந்து வெற்றி கஷ்டம்.. மார்க் பட்சர்

Mark Butcher
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்களை அடித்தும் தோல்வியை சந்தித்த இந்தியா 2வது போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனால் தொடரை சமன் செய்துள்ள இந்திய அணி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக வென்று சாதனையும் படைத்தது.

முன்னதாக சுப்மன் கில் இத்தொடரின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக கடந்த காலங்களில் இங்கிலாந்தில் அரை சதம் கூட அடிக்காததால் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவரை கேப்டனாக நியமிக்கலாமா? என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் கேப்டனாக வந்ததும் சதம், இரட்டை சதத்தை அடித்துள்ள அவர் 585* ரன்களை விளாசி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

தண்ணீரில் நீந்தும் வாதது:

மேலும் பர்மிங்காம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வென்ற முதல் இந்திய மற்றும் ஆசிய கேப்டனாகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தண்ணீரில் வாத்து நீந்துவது போல சுப்மன் கில் கேப்டன்ஷிப் பொறுப்பில் அசத்துவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் பட்சர் பாராட்டியுள்ளார். அடுத்தப் போட்டிகளில் அவரை விரைவாக கட்டுப்படுத்தாவிட்டால் இங்கிலாந்து வெற்றி பெறுவது கடினம் என்றும் பட்சர் எச்சரித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகில் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதை விட மிகவும் அழுத்தமான வேலை அதிகம் இல்லை அல்லவா? இங்கே விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் விளையாடிய இடத்தையும் அவர் நிரப்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டியதில்லை. அந்த வேலையில் அழுத்தம் மிகப்பெரியதாக உள்ளது”

- Advertisement -

மார்க் பட்சர் பாராட்டு:

“ஆனால் அவர் அந்த வேலையை தண்ணீரில் நீந்தும் வாத்து போல எடுத்துக் கொண்டுள்ளார். அந்த வேலையில் மிகவும் கச்சிதமாக செயல்படும் அவர் அமைதியான மனோபாவத்தைக் கொண்டுள்ளார். டெக்னிக்கல் அளவில் அழகாக விளையாடும் அவருக்கு இத்தொடர் சிறப்பாக துவங்கியுள்ளது. இத்தொடரின் முடிவில் அவர் தம்முடைய அணிக்காக சில சாதனைகளைப் படைக்கக்கூடும். ஏற்கனவே அவர் 600 ரன்கள் அடித்து விட்டார் அல்லவா?”

இதையும் படிங்க: ஃப்ரஷா வரும் துருப்புச்சீட்டு பும்ரா.. லார்ட்ஸில் வெற்றியுடன் இதை செய்யாம விடமாட்டாரு.. நாசர் ஹுசைன்

“அது அற்புதமான துவக்கம். மிடில் ஆர்டரில் விளையாடும் அவருக்கு எதிராக இங்கிலாந்து பதிலுடன் வர வேண்டும். நீங்கள் இந்தியாவின் டாப் 3 – 4 பேட்ஸ்மேன்களை சீக்கிரமாக தாண்ட வேண்டும். அதைத் தாண்டினாலும் அவர்களிடம் லோயர் மிடில் ஆர்டரில் தொல்லைக் கொடுக்க வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி துவங்குகிறது.

Advertisement