- Advertisement -
உலக கிரிக்கெட்

உண்மையா அவர் தான் போட்டியை மாத்துனாரு.. ஐபிஎல் வாய்ப்பு தான் இதுக்கெல்லாம் காரணம்.. ஸ்டோய்னிஸ் பேட்டி

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 16ஆம் தேதி நடைபெற்ற 35வது லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. அதன் காரணமாக நேற்று நமிபியா அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. மறுபுறம் போராடி தோற்ற ஸ்காட்லாந்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அதிரடியாக செயல்பட்டு 180/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரண்டன் மெக்முலன் 60, கேப்டன் பேரிங்க்டன் 42* ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கிளன் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

ஆட்டநாயகன் ஸ்டோய்னிஸ்:
அதைத் தொடர்ந்து 181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 1, கேப்டன் மார்ஷ் 8, மேக்ஸ்வெல் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 68, மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக 59 (29), டிம் டேவிட் 24* (14) ரன்களும் அடித்து 19.4 ஓவரில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தனர். அதனால் மார்க் வாட் 2, ஷரீப் 2 விக்கெட்டுகள் எடுத்தும் ஸ்காட்லாந்து தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு அழுத்தமான நேரத்தில் களமிறங்கி 9 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 203.45 ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஸ்டோய்னிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் 3 மாதங்கள் விளையாடியது ஃபார்மை மீட்டெடுக்க உதவியதாக தெரிவிக்கும் ஸ்டோய்னிஸ் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சூழ்நிலைகளை கண்டறிந்து பந்தை கடினமாக அடித்து நல்ல ஷாட்டுகளை விளையாடுவதே இப்போட்டியில் என்னுடைய வழக்கமான திட்டமாகும். மைதானத்தில் வலுவான காற்று இருந்தது. அதுவே அடிப்பதற்கான இடமாகவும் இருந்தது. பிட்ச் நன்றாக இருந்தது. அதில் ஸ்காட்லாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நானும் டிராவிஸ் ஹெட்டும் நீண்ட நேரம் பேட்டிங் செய்வதைப் பற்றி பேசினோம்”

இதையும் படிங்க: விராட் கோலியை விட என் தம்பி தான் இந்த விஷயத்துல பெஸ்ட் – சப்பை கட்டு கட்டிய கம்ரான் அக்மல்

“முக்கிய நேரத்தில் டிராவிஸ் ஹெட் 3 சிக்சர்கள் அடித்தது போட்டியை மாற்றியது. நான் தொடர்ச்சியாக விளையாடி வருகிறேன். கடந்த 3 – 4 மாதங்களாக ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக எனக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அது ஃபார்மை கண்டறிந்து இந்த ரன்களை அடிப்பதற்கு மிகவும் உதவியது” என்று கூறினார். அந்த வகையில் தங்களுடைய சூப்பர் 8 சுற்று வாய்ப்புக்கு உதவியதால் ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -