இந்திய பந்துவீச்சாளரான இவரின் பந்தில் எப்படி ஆடுவது என்று பயந்துவிட்டேன் – ஆஸி வீரர் பேட்டி

Marcus-harris
- Advertisement -

இந்திய அணி கடந்த வருடம் ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரின் வெற்றிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே காரணம். எப்போதும் இந்தியா என்றாலே சுழற்பந்து வீச்சுக்கு தான் பெயர் போனது.

Ind-1

- Advertisement -

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி வேகப்பந்து வீச்சில் வல்லமை படைத்த அணி என்ற பெயர் பெற்ற வருகிறது. இந்த வேகப்பந்து வீச்சு பல அணிகளையும் மிரட்டி வருகிறது. இதே போன்று தான் தற்போது சென்ற வருடம் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

அமேசான் ஆப் தற்போது இந்த தொடரைப் பற்றி வெப் சீரியஸ் எடுத்து வருகிறது. இந்த தொடரில் தான் தாங்கள் இந்திய பந்துவீச்சாளர்களை கண்டு எவ்வளவு பயந்தோம் ஆஸ்திரேலிய வீரர் மார்க்கஸ் ஹாரிஸ் கூறியுள்ளார். இந்த போட்டியில் முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை கஞ்சி காய்ச்சினர்.

marcus haris

இந்த வேகப்பந்து வீச்சை பொருக்க முடியாமல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் ஆக்ரோசமாக இருந்தது பெருத்து மைதானத்தில் மார்க்கஸ் ஹாரிஸின் தலையில் ஒரு பந்தை வீசினார் முகமது சமி.

- Advertisement -

இந்தப் பந்திற்கு பிறகு அவரால் களத்தில் சரியாக நிற்கக்கூட முடியவில்லை. இதுகுறித்து தற்போது பேசியுள்ளார் மார்க்கஸ் ஹாரிஸ் அமேசன் வீடியோவில் அவர் கொடுத்த பேட்டியில் : நான் மிகவும் பயந்து போயிருந்தேன். இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை. அதுவும் இது போன்ற ஆடுகளத்தில் அவர்கள் முன்னால் எங்களால் நிற்க கூட முடியவில்லை என்று கூறினார்.

Shami

மேலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கலாம், ஆனால் களத்தில் நிற்பது ஒரு புறம் எங்களுக்கு பயமாக இருந்தது. இந்த தாக்குதல் பந்துவீச்சால் நாங்கள் நம்பிக்கை இழந்தோம். எந்த பந்தை எப்படி ஆடுவது எந்த பந்தை கைவிடுவது என எங்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. குறிப்பாக பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோரரின் ஆக்ரோசம் எங்களை பின்னால் நகர்ந்து ஆட வைத்தது என்று பயத்துடன் கூறியுள்ளார் மார்க்கஸ்.

Advertisement