ஓய்வை வாபஸ் பெற்று இந்திய ரசிகர்களுக்காக இந்த சாதனை செய்ங்க ப்ளீஸ்.. கிங் கோலிக்கு திவாரி கோரிக்கை

Manoj Tiwary
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 123 போட்டிகளில் 9230 ரன்களை அடித்து 30 சதங்கள் குவித்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு பின் இந்தியாவின் ரன் மெஸினாக செயல்பட்ட அவர் நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அதை விட கேப்டனாக 7வது இடத்தில் தடுமாறிய இந்தியாவை தூக்கி நிறுத்திய அவர் 2016 – 2021 வரை உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் 40 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த விராட் கோலி வெற்றிகரமான இந்தியா மற்றும் ஆசிய கண்டத்தின் டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் சமீபத்திய தொடர்களில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை.

- Advertisement -

வாபஸ் பெறுங்க:

அதனால் அவரையும் ரோஹித் சர்மாவையும் அடுத்த இங்கிலாந்து தொடரில் கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்ததாக செய்திகள் வெளிவந்தன. அதற்கு முன்பாக அவர்களாகவே ஓய்வு பெற்றதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி ஓய்வு முடிவை வாபஸ் பெற்று மீண்டும் இந்தியாவுக்காக விளையாடி 10000 ரன்கள் அடித்து சாதனை படைக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏனெனில் அந்த சாதனையை செய்வது ரசிகர்களுக்கும் பல இளம் வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் என்று திவாரி தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் கொஞ்சம் வருத்தமாக உணர்கிறேன். ஏனெனில் டி20 போட்டிகள் ராஜாங்கம் நடத்தும் காலத்தில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருந்தார்”

- Advertisement -

திவாரி கோரிக்கை:

“அவர் அதற்கு எளிதாக முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதை அவருடைய கேப்டன்ஷிப் பொறுப்பில் பார்த்தோம். தற்போதைய நிலையில் அவர் தன்னுடைய கண்களை மூடி ஓய்வு முடிவை வேகமாக திரும்பப் பெறுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். அது இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் ஏராளமான ரசிகர்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வரும்”

இதையும் படிங்க: 112 ரன்ஸ்.. குஜராத்தை வெளுத்த கிளாஸிக் ராகுல்.. கில்கிறிஸ்ட், கோலியை முந்தி 4 தனித்துவமான சாதனை

“உள்ளூரில் பெங்கால் அணிக்காக ஓய்வு அறிவித்த 5 நாட்கள் கழித்து நான் மீண்டும் வந்து ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடினேன். அது போல சில நேரங்களில் நீங்கள் மறதியால் ஓய்வு முடிவை அறிவிக்கக்கூடும். விராட் கோலியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் இருக்கிறது. அவருக்கு 10,000 ரன்கள் முக்கியம் இல்லை என்றாலும் நிறைய இளம் வீரர்கள் அந்த சாதனையை செய்வதை கனவாக கொண்டுள்ளனர்” எனக் கூறினார்

Advertisement