அவங்கள கடவுள் ஆசிர்வதித்து புரிஞ்சி பேச கொஞ்சம் அறிவை தரட்டும் – பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் வீரர்கள் இந்திய முன்னாள் வீரர்களையும், இன்னாள் வீரர்களையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்தியாவின் வீரேந்தர் சேவாக், சச்சின் டெண்டுல்கர் போன்றோரை அடிக்கடி வம்பிழுத்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

Akhtar

அதேபோல் வக்கார் யூனிஸ் சமீபத்தில் விராட் கோலியின் உடல்தகுதி பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதியை விட பெரிது அல்ல என்றெல்லாம் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணபலம் கொண்டதால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் வாரியங்களையும் வளைத்துப் போட்டு தனக்கு தேவையானதை செய்து கொண்டு வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.

இதுகுறித்து இந்திய வீரர் கௌதம் கம்பீர், மனோஜ் திவாரி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் போன்றோரும் பதிலடி கொடுத்து வந்த நிலையில் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் வீரர்கள் குறித்து தற்போது பேசியுள்ளார் மனோஜ் திவாரி.

Akhtar

அவர் கூறுகையில்… அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஏதேனும் ஒருசில அறிவுடன் விஷயங்களை தெரிந்து பேச வேண்டும். அவ்வாறு பேசுவதற்கு கடவுள் தான் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மனோஜ் திவாரி.

- Advertisement -

Akhtar

எப்போதும் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை வம்பிழுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் அவர்களை விமர்சிப்பது இல்லை என்றாலும் இதுபோன்று ஓரிரு வார்த்தைகளால் பதில் அளிப்பதை தவறவிடுவதில்லை.