எனக்கு அனைத்து தகுதியும் இருந்தும் இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கவில்லை – இந்திய வீரர் புலம்பல்

Raina

மனோஜ் திவாரி இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருந்தவர் இந்திய அணிக்காக 12 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டியிலும் ஆடியிருக்கிறார். இதில் ஒரு சதம், ஒரு அரை சதம் என மொத்தமாக 302 ரன்கள் அடித்து இருக்கிறார். இவர் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணிக்கு எதிராக ஆடினார்.

Tiwary 1

ஆனால் திவாரி இந்திய அணியை விட்டு நீக்கும் முன்னர் 2011 ஆம் ஆண்டு கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன் பின்னர் இதற்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து அவ்வப்போது புலம்பி வருகிறார். இவர் தற்போதும் கூட இது பற்றி பேசி உள்ளார். அவர் கூறுகையில்..
.
ஒருகட்டத்தில் 2013ஆம் ஆண்டு. ஆஸ்திரேலியாவிற்கு சென்ற இந்திய அணி வீரர்கள் கொண்ட அணியில் என்னை எடுக்கவில்லை. குறிப்பாக மிடில் ஆடர் வீரர்கள் அந்த தொடரில் ரன்களை அடிக்கவில்லை. இதன் காரணமாக அங்கு நிறைய காலியாக இடம் இருந்தது என்னை அணியில் எடுத்திருக்கலாம்.

Tiwary

ஆனால் அப்படி என்னை அணியில் தேர்வு செய்யவில்லை என்று கூறியுள்ளார் மனோஜ் திவாரி. மேலும் கங்குலி உருவாக்கிய அணியை வைத்துதான் தோனி 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை வென்றார் என்றும் கூறியுள்ளார் மனோஜ் திவாரி.

- Advertisement -

மனோஜ் திவாரி கடந்தவருடம் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் ஏலத்தில் எடுக்கப்படாததால் இவர் ஐபிஎல் அணிகளை குற்றம்சாட்டி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.