நான் சதமடித்த அடித்த அடுத்த போட்டியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடவில்லை – இந்திய வீரர் உருக்கம்

Tiwary
- Advertisement -

இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் திறமையிருந்தும் இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் உள்ளூர் போட்டியுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தவர் தான் மனோஜ் திவாரி. தற்போது இவருக்கு 34 வயதாகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது 22 வயதில் இந்திய அணியில் அறிமுகமானார். அதன்பின்னர் இதுவரை 12 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

tiwari 1

- Advertisement -

அதேபோல் மூன்று வருடங்கள் கழித்து கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வென்றார். ஆனால் அதன் பிறகு ஒரு போட்டியில் கூட இந்திய அணிக்காக களம் இறங்கியது கிடையாது. அப்போது தோனிதான் கேப்டனாக இருந்தார். இது குறித்து நான் தோனியிடம் தற்போது வரை எதுவும் கேட்டதில்லை என்று தெரிவித்துள்ளார் மனோஜ் டிவாரி. இதுகுறித்து அவர் கூறுகையில் :

நான் இந்திய அணிக்காக விளையாடி கடைசியாக சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றேன். அடுத்த 14 போட்டியில் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இப்படி நடக்கும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. ஆனால் கேப்டன், பயிற்சியாளர், அணி நிர்வாகம் ஆகியோர் எடுக்கும் முடிவிற்கு எப்போதும் உறுதுணையாக ஒரு வீரர் இருக்க வேண்டும் .

Tiwary 1

அந்த நேரத்தில் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தான் செய்வார்கள். ஒரு வீரர் என்ற அடிப்படையில் எனக்கு பதிலாக வேறு ஒரு வீரர் சரியாக இருப்பார் என்று நினைத்து அவரை எடுத்திருக்கலாம். கேப்டனிடம் இது குறித்து கேட்க வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன். தற்போது வரை அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை அல்லது எனக்கு அதனைக் கேட்க தைரியம் இல்லை என்றே கூறலாம்.

- Advertisement -

தோனி போன்ற சீனியர் வீரருக்கு நான் மிகப்பெரிய மதிப்பு அளிக்கிறேன். இதன் காரணமாகவே இதுபோன்ற விஷயங்களை கேட்க நாம் சற்று பயப்படுவோம். இதனாலேயே நான் அவரிடம் இந்த விஷயம் குறித்து தற்போது வரை கேட்டதில்லை என்று கூறியுள்ளார் மனோஜ் மனோஜ் திவாரி. இவரைப்போன்று திறமையான வீரர்கள் பலருக்கு இதுபோன்ற வாய்ப்புகள் மறுப்பு சம்பவம் பலவற்றை நாம் பார்த்துள்ளோம்.

Tiwary 2

குறிப்பாக சேவாக்கிற்கு அடுத்து இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த கருண் நாயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தோனி குறித்து நாள்தோறும் வெளியாகி யாரும் செய்திகளில் இதுவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அப்போதிருந்த தேர்வுக்குழுவினர் முடிவும் இவரது தேர்வில் முக்கிய பங்கினை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement