இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா ஆலோசகராக வெல்ல உதவியதால் அவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருடைய தலைமையில் இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியை சந்தித்தது.
அதே போல ஆஸ்திரேலிய மண்ணிலும் தோல்வியை சந்தித்த இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 10 வருடங்கள் கழித்து கோட்டை விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெறாமல் வெளியேறியது. முன்னதாக 2011 உலகக் கோப்பையை வென்றதற்கான பாராட்டுகளை தோனி மட்டுமே சுயநலமாக பெறுவதாக கௌதம் கம்பீர் கடந்த காலங்களில் பலமுறை விமர்சித்துள்ளதை அனைவரும் அறிவோம்.
நயவஞ்சக கம்பீர்:
இந்நிலையில் தோனியை குறை சொல்லும் கௌதம் கம்பீர் 2012, 2014 ஐபிஎல் கோப்பைகளை கொல்கத்தா வெல்வதற்கான பாராட்டுகளை சுயநலமாக தாமே எடுத்துக் கொண்டதாக மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கௌதம் கம்பீர் ஒரு நயவஞ்சகர். அவர் சொல்வதை செய்வதில்லை. கேப்டன் ரோஹித் மும்பையை சேர்ந்தவர் அபிஷேக் நாயர் மும்பையை முறையைச் சேர்ந்தவர்”
“ஆனால் தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளதால் ரோகித் முன்னே தள்ளப்பட்டுள்ளார். உள்ளூரில் அசத்தும் ஜலஜ் சக்சேனா பற்றி எந்த பேச்சுக்களும் இல்லை. ரோகித் சர்மா உலகக்கோப்பை வென்ற கேப்டன். கௌதம் கம்பீர் ஐபிஎல் கோப்பையை கேப்டனாகவும் ஆலோசகராகவும் வென்றவர். அவர் தனியாளாக கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று கொடுக்கவில்லை”
சுயநலமான கம்பீர்:
“ஜேக் காலிஸ், சுனில் நரேன், நான் மற்றும் அனைத்து வீரர்களும் வெற்றியில் பங்காற்றினோம். ஆனால் யார் வெற்றிக்கான பாராட்டை எடுத்துக் கொண்டது? மக்கள் தொடர்பு குழுவைத்து (விளம்பரம்) சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அது இந்த அனைத்து பாராட்டுகளையும் கௌதம் கம்பீருக்கு கொடுத்தது. இந்திய அணியில் பவுலிங் பயிற்சியாளரின் வேலை என்ன? ஏனெனில் தலைமை பயிற்சியாளர் சொல்வதை அவர் அப்படியே கேட்பார்”
இதையும் படிங்க: அஷ்வின் மனசு நொந்து இருப்பாரு.. அதுதான் ரிட்டயர்மென்ட் அறிவிக்க காரணம் – பரத் அருண் கருத்து
“மோர்னே மோர்கெல் லக்னோ ஐபிஎல் அணியில் இருந்தார். அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியில் துணைப் பயிற்சியாளராக இருந்தார். அவர்கள் தலைமை பயிற்சியாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அப்படியே கேட்டு நடப்பார்கள்” என்று கூறினார். அந்த வகையில் துணை பயிற்சியாளர்களால் இந்திய அணியில் எந்தப் பயனும் இல்லை என்று திவாரி தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



