2013இல் வன்மத்தால் கம்பீர் பழி வாங்காம விட்ருந்தா.. என்னோட பேங்க் பேலன்ஸ் குறைஞ்சுருக்காது.. மஞ்சோ திவாரி

Manoj Tiwari 3
- Advertisement -

கொல்கத்தாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்து 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி பெரிய ரன்கள் குவிக்க தவறிய அவர் ஐபிஎல் தொடரிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்த அப்போதைய கேப்டன் தோனி இவரை கழற்றி விட்டார்.

அப்படி இந்திய அணியில் வாய்ப்பை இழந்த அவர் மாநில அரசியலில் ஈடுபட்டு விளையாட்டுத்துறை அமைச்சராக முன்னேறினார். அதன் பின்பும் ரஞ்சிக்கோப்பை மட்டும் விளையாடி வந்த அவர் 10000 ரன்கள் குவித்து சாதனை படைத்த பின் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு நிகரான திறமை கொண்டிருந்தும் தமக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று தோனியிடம் கேட்க உள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

குறைந்த பேங்க் பேலன்ஸ்:
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்காக விளையாடிய போது 2013 சீசனில் ஏற்பட்ட சண்டையால் அடுத்த வருடமே கேப்டன் கௌதம் கம்பீர் தம்மை வன்மத்துடன் கழற்றி விட்டதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார். அதனால் ஐபிஎல் சம்பளத்தை இழந்த தன்னுடைய வங்கி கணக்கில் பணமும் குறைந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“கொல்கத்தா அணியில் விளையாடிய போது உடை மாற்றும் அறையில் கௌதம் கம்பீருடன் மிகப்பெரிய சண்டையில் ஈடுபட்டேன். அது எப்போதும் வெளிச்சத்திற்கு வந்ததில்லை. 2012இல் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரின் இறுதிப் போட்டியில் நான் பவுண்டரி அடித்ததால் கொல்கத்தா வென்றது. அதனால் கொல்கத்தா அணிக்காக விளையாட எனக்கு மேலும் ஒரு வருடம் வாய்ப்பு கிடைத்தது”

- Advertisement -

“இருப்பினும் 2013இல் கௌதம் கம்பீருடன் நான் சண்டை போடாமல் இருந்திருந்தால் இன்னும் 2 – 3 வருடங்கள் கொல்கத்தாவுக்கு விளையாடியிருப்பேன். அதன் காரணமாக ஒப்பந்தப்படி எனக்கு சம்பளம் கிடைத்திருக்கும். என்னுடைய வங்கி கணக்கில் பணமும் உயர்ந்திருக்கும். ஆனால் அதைப்பற்றி நான் சிந்தித்ததில்லை. அதே போல டெல்லி அணிக்கு நான் விளையாடச் சென்ற போது கேரி கிறிஸ்டன் பயிற்சியளராக இருந்தார்”

இதையும் படிங்க: அப்போ மட்டும் நல்லாருந்துச்சா.. ஓவர் ஆக்டிங் பண்ணாதீங்க.. இந்திய தொடரின் விமர்சனங்களுக்கு கிரேம் ஸ்வான் பதிலடி

“அங்கே ஒவ்வொரு போட்டியிலும் முதலில் தேர்வு செய்யப்பட்ட பிளேயிங் லெவன் சரியாக விளையாடாதது என் கண் முன்னே நடந்தது. திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலர் காயத்தால் வெளியேறினர். எனவே “ஒன்று என்னை பிளேயிங் லெவனில் எடுங்கள் இல்லையேல் விடுங்கள்” என்று டெல்லி அணியிடம் சொன்னேன். 2.8 கோடிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நான் அப்படி சொன்னதை அவர்கள் தவறாக புரிந்துக் கொண்டு கழற்றி விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நான் எப்போதும் பண இழப்பைப் பற்றி சிந்தித்ததில்லை” என்று கூறினார்.

Advertisement