பேங்க் பேலன்ஸ் கொடுக்கும் ஆர்சிபி ஏமாளியா? அதெப்டி ஐபிஎல்’ல மட்டும் சொதப்புறீங்க.. மனோஜ் திவாரி விளாசல்

Manoj Tiwary
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. இந்த வருடம் முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை சந்தித்த அந்த அணி கடைசி 6 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்தது. குறிப்பாக நடப்பு சாம்பியன் சென்னையை கடைசி போட்டியில் தோற்கடித்த பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

அதனால் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி ராஜஸ்தானுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதன் காரணமாக தொடர்ந்து 17வது வருடமாக ஐபிஎல் கோப்பையை தொட முடியாமல் ஆர்சிபி வெளியேறியது அந்த அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் சிஎஸ்கே அணிக்கு எதிரான வெற்றியில் அதிக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் தற்போது ஆர்சிபி அணி கிண்டல்களை சந்தித்து வருகிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவும் – ஆர்சிபி’யும்:
அந்த அணியின் இந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். இந்த வருடம் ஆரம்பத்திலேயே சுமாராக செயல்பட்ட அவர் ஒரு கட்டத்தில் தம்மைத் தாமே ஆர்சிபி பிளேயிங் லெவனிலிருந்து நீக்கிக்கொண்டார். அதைத்தொடர்ந்து மீண்டும் விளையாட வந்த அவர் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி தோல்விக்கு காரணமானார்.

இந்நிலையில் மொத்தமாக 10 போட்டிகளில் 52 ரன்களை 5.78 என்ற மோசமான சராசரியில் எடுத்த மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவுக்கு சமமாக ஆர்சிபி அணியில் விளையாடவில்லை என்று மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். எனவே அடுத்த வருடம் அவரை ஆர்சிபி கழற்றி விட வேண்டும் என்று வெளிப்படையாக கேட்டுக் கொள்ளும் திவாரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாம் மேக்ஸ்வெல் பற்றி பேச வேண்டும். அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான அனுபவம் இருக்கிறது”

- Advertisement -

“ஆஸ்திரேலியாவுக்காக நீங்கள் அற்புதமாக செயல்படுகிறீர்கள். ஆனால் ஐபிஎல் தொடர் என்று வரும் போது மட்டும் அவருக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அவருக்கு இங்கே ஆர்வமில்லாதது போல் தெரிகிறது. குறிப்பாக அவுட்டானால் அதைப்பற்றி அவர் கவலைப்படுவதாக தெரிவதில்லை. ஏனெனில் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் சென்று விடுகிறது”

இதையும் படிங்க: வளர்ப்பு பிராணிகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதற்கு காரணமும் இருக்கு – தல தோனி அளித்த பேட்டி

“அதனால் ஜாலியாக இருந்து சிரித்து விட்டு அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்வார். ஆனால் இறுதி முடிவு என்ன? நீங்கள் வெற்றிக்காக விளையாட வேண்டும். எனவே அவரை விட்டு ஆர்சிபி நகர வேண்டும். அவர்கள் தோல்வியை சந்திக்கும் போது என்ன பிரச்சனை என்பதை நாங்கள் இங்கே அமர்ந்து விவாதிக்கிறோம். ஆனால் அவர்கள் 6 வெற்றியுடன் தகுதி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையான முடிவு கோப்பை வெல்வதில் தான் இருக்கிறது. அது அவர்களிடம் இல்லாததால் அங்கே பிரச்சினை இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement