வளர்ப்பு பிராணிகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.. அதற்கு காரணமும் இருக்கு – தல தோனி அளித்த பேட்டி

MSD
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முக்கிய லீக் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியை சந்தித்து நடப்பு 17-வது ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது. இந்த சீசனானது தோனிக்கு கடைசிசீசனாக பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரில் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருந்தது.

ஆனால் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி வெளியேறி உள்ளதால் அடுத்ததாக தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? ஏற்கனவே தெரிவித்தது போல சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது ஓய்வு அறிவிப்பாரா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் தோனியின் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் குறித்து நிலவி வருகிறது.

- Advertisement -

அதோடு தோனி ஓய்வு பெற்று விட்டாரா? இல்லையா? என்பது குறித்த உறுதியான தகவலும் இல்லாமல் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாகவே பிரத்தியேக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தோனி அளிக்கும் கருத்துக்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் தற்போது தனது செல்லப் பிராணிகள் குறித்து அவர் சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : நான் தோல்வியடைந்து வீட்டுக்கு வந்தாலும் என் நாய் அதே மாறாத அன்புடன் என்னை வரவேற்கும். நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகிய பின்னர் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட விரும்பினேன். அதனால் மனதளவிலும் உடலளவிலும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறேன்.

- Advertisement -

அதேபோன்று கார்களை சேகரிப்பது, மோட்டார் பைக்குகளை சேகரிப்பது போன்ற விடயங்கள் என்னை மன அழுத்தத்தில் இருந்து வெளியே கொண்டு வர உதவும். எனக்கு எப்போதெல்லாம் மன அழுத்தம் ஏற்பட்டாலும் மோட்டார் பைக் மற்றும் கார் நிறுத்தி வைக்கும் இடத்திற்கு செல்வேன் அங்கு சில மணி நேரங்கள் இருந்தால் என்னால் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். அதேபோன்று சிறு வயது முதலே செல்லப் பிராணிகள் உடனே நான் அதிகம் வளர்ந்தேன்.

இதையும் படிங்க : சிஎஸ்கே’விடம் வாயை மூடிட்டு போயிருக்கனும்.. தனியாளா அவர் உங்களை அழிச்சிட்டாரு.. ஆர்சிபி’யை விளாசிய ஸ்ரீகாந்த்

அதனால் பூனையோ அல்லது நாயோ என்னுடன் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக நாய்களே எனக்கு அதிகம் பிடிக்கும். ஏனென்றால் அது நம் மீது அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும். ஒரு போட்டியில் தோல்வி அடைந்து நான் வீட்டுக்கு சென்றால் கூட என் நாய் மாறாத அன்புடன் என்னை வரவேற்கும் என தோனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement