இவரை அணியில் சேர்த்தால் பேட்டிக்கு பேட்டிங்கும் கிடைக்கும் பௌலிங்க்கு பவுலிங்கும் கிடைக்கும் – மஞ்ச்ரேக்கர் கருத்து

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளை வென்ற இந்திய அணி முதல் முறையாக தோல்வி அடைந்துள்ளது.

Ind-lose

- Advertisement -

இந்த தோல்வியினால் கேப்டன் கோலி மட்டுமின்றி இந்திய அணியும் அதிக அளவு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அஸ்வினின் பேட்டிங் குறித்து ஆட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது :

அஸ்வினின் பேட்டிங் வரவர மோசமாகிக் கொண்டே வருகிறது. அவர் பேட்டிங்கில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதேவேளையில் ஜடேஜாவின் பேட்டிங் கடந்த பல தொடர்களாகவே சிறப்பான நிலையில் உள்ளது. எனவே அஸ்வினை அடுத்த போட்டியில் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜடேஜாவை சேர்க்கலாம் என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Jadeja

மெயின் ஸ்பின்னர் என்ற முறையிலேயே மட்டுமே அஷ்வின் அணியில் ஆடுவதால் தற்போது ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ஜடேஜா பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார் பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதால் அவரை சேர்க்குமாறு மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் கோலி எந்த அளவு அடுத்த போட்டியில் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement