நியூசிலாந்து அணியால் முடிந்தது. இந்தியாவால் முடியல அதற்கு காரணம் இதுதான் – மஞ்சரேக்கர் பேட்டி

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 165 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துணை கேப்டன் ரஹானே 46 ரன்களை சேர்த்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து அணி மூன்றாம் நாளான இன்று 348 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

Agarwal

- Advertisement -

இதன் மூலம் நியூசிலாந்து அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.

ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று . இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் : நியூசிலாந்து அணியில் பவுலர்கள் தனிப்பட்ட முறையில் திட்டங்களை திட்டவில்லை ஒரு அணியாக இணைந்து ஆலோசனை செய்து இந்திய வீரர்களுக்கு எதிராக திட்டங்களை தீட்டினார்கள்.

Jamieson

ஆனால் இந்திய அணியில் இஷாந்த் ஷர்மாவோ, ஷமியோ, பும்ராவோ அவர்களாக திட்டங்களை வகுத்து அதற்கேற்றார்போல் பந்து வீசினர். ஒரு அணியாக இணைந்து திட்டமிட்டதால் நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால் இந்திய பவுலர்கள் அதை செய்ய தவறினர். மேலும் எந்த ஒரு சூழலிலும் ஆட்டத்தை பின்வாங்காமல் தொடர்ந்து நியூசிலாந்து வீரர்கள் செயல்பட்டனர். இந்திய வீரர்கள் இந்த சூழ்நிலையில் எப்படி பந்துவீசுவது என்று தெரியாமல் திணறினார்கள் இதுவே இந்திய அணிக்கு பிரச்சினையாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement