கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி இவர் ஜென்டில்மேன். இவரே எனது ரோல்மாடல் – மனம்திறந்த மனீஷ் பாண்டே

Pandey 2
- Advertisement -

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரும், இந்திய அணியின் இளம் வீரருமான மனிஷ் பாண்டே. இவர் அவ்வப்போது இந்திய அணிக்கு தலையை காட்டிவிட்டு திடீரென மறைந்து விடுவார். இவருக்கான நிரந்தர இடம் இந்திய அணியில் தற்போது வரை கிடைக்கவில்லை. விராட் கோலியுடன் இளம் வீரராக ஆடியவர். ஆனால் இன்றுவரை இவரால் நிலையான இடம்பிடித்து விளையாடமுடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சமூக வலைத்தளம் மூலம் கலந்துகொண்டார்.

pandey 1

- Advertisement -

அப்போது அந்த உரையாடலில் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் குறிப்பாக அவரது ரோல் மாடல் யார் என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் : நான் சிறுவயதாக இருக்கும்போதே எனது ரோல் மாடலாக ராகுல் டிராவிட்டை எடுத்துக்கொண்டேன். அவரது தீவிர ரசிகன் நான். எப்போதும் அவரது பேட்டிங்கை பார்த்துக்கொண்டே இருப்பேன்.

கிரிக்கெட்டுக்காக மட்டும் அல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் அவர் மிகவும் ஒழுக்கமானவர். இரண்டிலும் சரியான ஒழுக்கத்தை கடைபிடித்தவர். தனிப்பட்ட முறையில் அவர் மீது மிகுந்த மரியாதை எனக்கு உள்ளது. அவருடன் முதன்முதலில் ரஞ்சி கோப்பையில் ஆடியது, அதன் பின்னர் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக ஆடியது என அனைத்திலும் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

Pandey

நான் இந்திய அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடும் போது அவரைப் போல ஆட வேண்டும் என்று உன்னிப்பாக கவனித்து வந்தேன். அதே நேரத்தில் அவர் ஸ்லிப்பில் நின்று கேட்ச் பிடிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் .அவரைப்போலவே நானும் செய்ய வேண்டு என ஆர்வம் கொண்டு பயிற்சி எடுத்து வருகிறேன் என்று மனம் திறந்து பேசினார் மனிஷ் பாண்டே.

Dravid

மனிஷ் பாண்டே, கேஎல் ராகுல், போன்றோர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.இவர்கள் இருவருமே தற்போது வரை ரஞ்சிக் கோப்பை கர்நாடகா அணிக்காக ஆடி வருகின்றனர். மேலும் இவ்விருவரும் மிகச்சிறந்த நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் ராகுல் தொடர்ந்து இந்திய அணிக்கு ஒரு முக்கிய வீரராக விளையாடிவருகிறார். ,மனீஷ் பாண்டே இந்திய டி20 அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement