தோனிக்கு பதில் பண்ட் கீப்பிங் செய்தாலும், தோனியின் இடத்தில் பேட்டிங் செய்யப்போவது இவர்தான் – விவரம் இதோ

Pant
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே இன்று முதலாவது டி20 போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. முதல் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

Pant

இரவு 8 மணிக்கு துவங்க உள்ள இந்த முதல் போட்டியில் இந்திய அணி இளம் வீரர்களைக் கொண்ட அணியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தோனி கலந்து கொள்ளாத இந்த தொடர் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டோனிக்கு பதிலாக இந்த தொடர் முழுவதும் பண்ட் கீப்பராக செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால் வழக்கமாக தோனி இறங்கும் ஐந்தாவது இடமான பினிஷிங் ரோலில் யார் இறங்குவார்கள் என்று சந்தேகம் ஏற்பட்ட நிலையில் தற்போது அந்த இடத்தில் இந்திய அணியின் இளம் வீரரான மணிஷ் பாண்டே விளையாட உள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் ஐபிஎல் போட்டியில் அவர் ஐந்தாவது இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாடி வருகிறார்.

manish-pandey

அதுமட்டுமின்றி முதல் தர போட்டிகளில் அவர் 5வது இடத்தில் இறங்கி விளையாடி வருவதால் அவருக்கு இன்றைய போட்டியில் தோனியின் இடத்தில் இறங்க வாய்ப்பு கிடைக்கும் மேலும் பண்ட் அதிரடி வீரர் என்பதால் அவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு களம் இறங்க வாய்ப்பு உள்ளது என்றும் நம்பலாம்.

Advertisement