இவர் இருந்தா வெற்றி தான், கடைசியா 18 மேட்ச் இவர் இருந்ததுல ஒன்னு கூட மிஸ் ஆகலயாம் – சூப்பர் தகவல் இதோ

Pandey-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் இன்று நடைபெற்றது.

Kohli

- Advertisement -

இந்த போட்டியிலும் இரு அணிகளும் 165 ரன்களை குவிக்க போட்டி கடந்த 3 ஆவது போட்டியை போல சூப்பர் ஓவர் வரை சென்றது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 13 ரன்கள் குவிக்க 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது யாதெனில் இந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரரான மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 36 பந்துகளில் 50 ரன்கள் அடித்து இந்திய அணியின் ரன் குவிப்பிற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். மனிஷ் பாண்டே இந்திய அணியில் விளையாடினால் அவரது அதிர்ஷ்டம் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. புள்ளி விவரங்களும் அதனை உறுதி செய்துள்ளன.

pandey 1

ஏனெனில் இதுவரை இந்திய அணிக்காக மனிஷ் பாண்டே 37 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிலும் குறிப்பாக கடைசியாக மனிஷ் பாண்டே இந்திய அணியில் இடம்பெற்று விளையாடிய 18 டி20 போட்டிகளில் மனிஷ் பாண்டே ஆடும் லெவனில் இருந்து ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோற்றதே இல்லையாம். எனவே இந்தியன் “லக்கி சார்ம்” என்று ரசிகர்கள் தற்போது மனிஷ் பாண்டேவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த தகவல் மிக வேகமாக பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement