மனிஷ் பாண்டே சிக்ஸர் அடித்த பந்தை திருடிக்கொண்டு ஓடிய ரசிகர் – வைரலாகும் வீடியோ

Pandey

சையத் முஷ்டக் அலி 20 தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடக அணியும், தமிழ்நாடு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 180 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தமிழ்நாடு அணி கடுமையாக போராடி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப்போட்டியில் கர்நாடக அணியின் கேப்டன் மனிஷ் பாண்டே 45 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கர்நாடக அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் இந்த போட்டியில் ஒரு ஓவரில் முருகன் அஸ்வின் வீசிய பந்தை மனிஷ் பாண்டே ஒரு இமாலய சிக்சர் அடித்தார். மனிஷ் பாண்டே வானுயர அடித்த அந்த பந்து மைதானத்திற்கு சற்று வெளியே சென்று விழுந்தது.

உடனே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அந்த பந்தை எடுத்து வர ஓடினார்கள் ஆனால் அதற்குள் மைதானத்தின் வெளி பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு ரசிகர் அந்த பந்தை எடுத்து தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தார் அந்த ரசிகரின் இந்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வீரரான மனீஷ் பாண்டே நேற்று தமிழ் நடிகையான அர்ஷிதா ஷெட்டியை மும்பையில் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.